Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

"முடிவுக்கு வந்தது பிரபாஸின் பேச்சுலர் வாழ்க்கை" பெண் யார் தெரியுமா?

, திங்கள், 5 ஆகஸ்ட் 2019 (17:37 IST)
பாகுபலி படத்தின் மூலம் உலக புகழ்பெற்ற நடிகர் பிரபாஸ் தற்போது சாஹோ படத்தில் நடித்துள்ளார். இப்படம் ஆகஸ்ட் இறுதியில் திரைக்கு வரவிருக்கிறது. இதற்கிடையில் தற்போது பிரபாஸின் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடையும் விதத்தில் தற்போதைய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. 


 
அதாவது கடந்த சில வருடங்ககளாகவே பிரபாஸின் திருமணத்தை எண்ணி அவரது குடுபத்தினரை விட அவரது ரசிகர்களுக்கு தான் அதிக கவலையாக இருந்து வருகிறது. எப்போது நீங்ககள் திருமணம் செய்துகொள்வீர்கள் என அவரது ரசிகர்கள் விடாமல் கேள்வி கேட்டு வருகின்றனர். ஆனால் அவரோ அதை பற்றியெல்ல்லாம் கவலை படாமல் கூலாக தனது அடுத்தடுத்த படங்களில் அதீத கவனத்தை செலுத்தி தரமான படங்ககளை கொடுக்கவேண்டும் என்ற முனைப்பில் இருந்து வருகிறார். 
 
இந்நிலையில் தற்போது இன்பகரமான தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதவது, சாஹோ  படத்தின் ரிலீசிற்கு பிறகு பிரபாஸிற்கு திருமணம் நடக்கவிருப்பதாகவும், மணப்பெண் பிரபல அமெரிக்க தொழிலதிபர் ஒருவரின் மகள் எனவும் தகவல் கிடைத்துள்ளது. இருப்பினும் பிரபாஸ் வீட்டார் இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை. 

webdunia

 
ஆனால்,   இந்த ஆண்டுக்குள் பிரபாஸூக்கு திருமணம் நடைபெறும் என அவரது மாமாவும், சகோதரியும் ஏற்கனவே  தெரிவித்துவிட்டனர். ஆகவே இந்த ஆண்டு இறுதியில் பிரபாஸின் பேச்சுலர் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிடும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவலை அறிந்த பிரபாஸின் ரசிகர்கள் மகிழ்ச்சின் உச்சத்தில் இருந்து வருகிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இதை கவனித்தீர்களா! கசிந்தது பிக்பாஸின் ரகசியம் - வீடியோ!