Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபாஸின் சாஹோ பட ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

Webdunia
திங்கள், 23 அக்டோபர் 2017 (12:40 IST)
'பாகுபலி' என்ற பிரம்மாண்ட படத்திற்கு பிறகு பிரபாஸ் நடித்து வரும் படம் ‘சாஹோ’. சுஜீத் எழுதி இயக்கியுள்ளார். இந்தப் படம் தமிழ், இந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் நாயகியாக ஸ்ரத்தா கபூர்  நடிக்கிறார்.

 
 
தற்போது பாகுபலி நாயகன் பிரபாஸின், மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட சாஹோ படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர், அவரது பிறந்த  நாளான இன்று வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. நாடு முழுவதும் உள்ள பிரபாஸின் ரசிகர்களுக்கான விருந்தாக இந்தப் போஸ்டர் வெளியாகியுள்ளது.
 
இப்படம் சுமார் ரூ.150 கோடி பட்ஜெட்டில் தயாராகிறது. இந்நிலையில் இந்த படத்தில் முக்கிய கேரக்டர் ஒன்றில் அருண்விஜய்  நடிக்கவுள்ளதாக  கூறப்படுகிறது. இப்படத்தின் சண்டை காட்சிகளை ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டர் கென்னிபேட்ஸ்தான்  அமைக்கிறாராம். மேலும் சண்டை காட்சிகளுக்காக மட்டும் படக்குழு ரூ.25 கோடி செலவு செய்துள்ளதாக தகவல்கள்  கூறுகின்றன.
 
இப்பட ஃபஸ்ட் லுக் போஸ்டரில், யாருமில்லாத ஒரு சாலையில் முகத்தை போர்வையால் இறுக்கமாக மூடியபடி பிரபாஸ் நடந்து செல்வது மாதிரி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் இப்படம் ஒரு ஆக்ஷன் க்ரைம் படம் என்பதை அனுமானிக்க  முடிகிறது. பாகுபலி 2 வெளியாகி 6 மாதங்கள் ஆன நிலையில், பிரபாஸின் அடுத்த படமான சாஹோ போஸ்டர்  வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஒரிஜினலுக்கு முன்பே ரீமேக் படத்துக்கான ரிலீஸ் தேதியை அறிவித்த த்ரிஷ்யம் 3 படக்குழுவினர்.. ஜீத்து ஜோசப் விளக்கம்!

மணிரத்னம் யாரிடமும் மன்னிப்புக் கேட்கவில்லை- மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் விளக்கம்!

அஜித் சாரை இயக்க இன்னும் சில ‘சரியான’ படங்கள் கொடுக்க வேண்டும்- இயக்குனர் ஸ்ரீகணேஷ் ஆசை!

சினிமாவில் பல நாட்களாகப் போதைபொருள் பயன்பாடு உள்ளது –நடிகர் விஜய் ஆண்டனி பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments