Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான்காவது முறையாக தள்ளி வைக்கப்படுகிறதா பிரபாஸின் ‘கல்கி 2898 AD’ ரிலீஸ்!

vinoth
புதன், 29 மே 2024 (11:50 IST)
கமல்ஹாசன்,பிரபாஸ் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கும் பிராஜக்ட் கே படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் நடிக்க 20 நாட்களுக்கு கமல்ஹாசனுக்கு 150 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. கமல்ஹாசன் இணைந்துள்ளதால் இந்த படத்தின் மதிப்பு இப்போது பல மடங்கு அதிகமாகியுள்ளது.

கல்கி ஏடி 2898 எனப் பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் அமெரிக்காவில் கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது. இந்த படத்தின் முதல் பாகத்துக்கானஷூட்டிங் நடந்து முடிந்துள்ளது. கமல்ஹாசன் இந்த படத்தின் முதல் பாகத்திற்கான தன்னுடைய 15 நிமிடக் காட்சிகளை நடித்து முடித்துள்ளார் என சொல்லப்படுகிறது. ஜூன் 27 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இப்போது படத்தின் சில பணிகள் முடியாத காரணத்தால் ஜூன் 27 ஆம் தேதியும் ரிலீஸாகாது என தகவல்கள் பரவி வருகின்றன. ஏற்கனவே இந்த படத்தின் ரிலீஸ் தேதி மூன்று முறை அறிவிக்கப்பட்டு தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தக் லைஃப் படத்தின் ஷூட்டிங்கில் இழுபறி… இதுதான் காரணமா?

பிரபல ஓடிடியில் ரிலீஸ் ஆனது மோகனின் ‘ஹரா’ திரைப்படம்!

ஆம்ஸ்ட்ராங்க் கொலை… மருத்துவமனையில் கதறி அழுத இயக்குனர் பா ரஞ்சித்!

தங்கலான் டிரைலர் பற்றி வெளியான சூப்பர் தகவல்!

கிராஃபிக்ஸ் மேற்பார்வையாளர் என்னை ஏமாற்றிவிட்டார்… போலீஸ் நிலையத்தில் பார்த்திபன் புகார்!

அடுத்த கட்டுரையில்
Show comments