Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதனால்தான் தனுஷின் ‘ராயன்’ பட ரிலீஸ் தள்ளி வைக்கப்படுகிறதா?

vinoth
புதன், 29 மே 2024 (11:45 IST)
தனுஷ் தனது 50 ஆவது படமான ராயன் -ஐ தானே இயக்கி மின்னல் வேகத்தில் ஷூட்டிங்கை முடித்துள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தில் தனுஷோடு எஸ்ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன் மற்றும் செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.  இந்த படத்துக்காக மொட்டை அடித்து கெட்டப்பை மாற்றிய தனுஷ் மொத்த காட்சிகளையும் 110 நாட்களில் முடித்தார்.

இதில் தனுஷ் அண்ணனாகவும், காளிதாஸ் மற்றும் சந்தீப் கிஷன் ஆகியோர் அவரின் தம்பிகளாகவும் நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் பாஸ்ட்புட் கடை வைத்திருக்கும் சகோதரர்கள் எப்படி கேங்ஸ்டராக மாறுகிறார்கள் என்பதே கதை என சொல்லப்படுகிறது. இந்த படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்திருக்கும் நிலையில் முதல் சிங்கிள் பாடல் நாளை வெளியாக உள்ளது. இந்த படத்தில் செல்வராகவனும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இந்த படம் ஜூன் 13 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இப்போது படம் தள்ளிவைக்கப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்குக் காரணம் படத்தின் சில இடங்களில் படக்குழுவுக்கு முழு திருப்தி இல்லை என்பதால் மீண்டும் சில காட்சிகளை படமாக்க முடிவு செய்துள்ளார்களாம். அதனால்தான் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித் போலவே பெட்டியை தூக்கிட்டு கிளம்பும் ராஷ்மிகா மந்தனா.. தனுஷ் படத்தின் அப்டேட்..!

63 வயது பிரபல நடிகரின் மனைவியாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்.. வைரல் புகைப்படம்..!

ஹோம்லி ட்ரஸ்ஸில் ரைசா வில்சனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

கருப்பு நிற ட்ரஸ்ஸில் காஜல் அகர்வாலின் கார்ஜியஸ் போட்டோஷூட்!

இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் தேதி இல்லாமல் வெளியாகும் போஸ்டர்கள்… இதுதான் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments