Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Thursday, 10 April 2025
webdunia

பிரபல டிவி தொகுப்பாளி பவர் லிஃப்டிங்கில் இரட்டைத் தங்கப் பதக்கம்

Advertiesment
பவர் லிஃப்டிங் போட்டி
, திங்கள், 6 நவம்பர் 2017 (18:03 IST)
பிரபல டிவி தொகுப்பாளியான ரம்யா சுப்ரமணியன் பவர் லிஃப்டிங் போட்டியில் கலந்து கொண்டு இரட்டைத் தங்கப்  பதக்கம் வென்றுள்ளார்.

 
பவர் லிஃப்டிங் போட்டியில் இரட்டைத் தங்கப் பதக்கம் வாங்கியுள்ளார் தமிழ் நடிகையும் தொலைக்காட்சி தொகுப்பாளருமான  ரம்யா சுப்ரமணியன். பல முகங்கள் கொண்டவர். உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கிய வாழ்வு போன்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் தருபவர். சமீப காலமாக பவர் லிப்ட்டிங்கில் ஈடுபடுவதற்கு பயிற்சி பெற்று வந்தார். பல மாதங்கள் பயிற்சிக்கு  பிறகு சமீபத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான 'Dead Lifting' போட்டியில் பங்கேற்று இரண்டு தங்க பதக்கங்களை  வென்றுள்ளார்.
 
இது பற்றி ரம்யா பேசுகையில், ''கடந்த சில மாதங்கள் ஒரு மறக்க முடியாத பயணமாக இருந்தன. என்னால் இந்த 'பவர் லிஃப்டிங்' போட்டியில் பங்கேற்க முடியுமா என்ற சந்தேகங்கள் இருந்தது. ஆனாலும் கடுமையான பயிற்சியினாலும், உழைப்பாலும் இந்த பதக்கங்களை வென்றுள்ளேன். என்னை ஊக்கப்படுத்தும் எனது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் எனது  நன்றி என கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாளை வெளியாகுமா ‘விஸ்வரூபம் 2’ டிரெய்லர்?