Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல நடிகர் சதீஸ் கவுசிக் காலமானார்..... சினிமாத்துறையினர் இரங்கல்

Webdunia
வியாழன், 9 மார்ச் 2023 (17:15 IST)
பிரபல இந்தி நடிகர் சதீஸ் கவுசிக் இன்று மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்கு சினிமாத்துறையினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பிரபல இந்தி நடிகர் சதீஸ் கவுசிக். இவர்,  கடந்த 1967 ஆம் ஆண்டு வெளியான சூப்பர் ஹீரோ என்ற படமான மிஸ்டர் இந்தியா  மூலம் நடிகராக தன் கேரியரை தொடங்கினார்.

அதன்பின்னர், சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன்  இணைந்து நடித்த அவர், சின்னத்திரை முதல், சினிமாவில், காமெடி நடிகர், எழுத்தாளர், வசனகர்த்தா, தயாரிப்பாளர், மேடை நாடகம் எனப் பன்முகக் கலைஞராகத் திகழ்ந்தார்.

இந்த நிலையில், இன்று அதிகாலையில் உடல் நலம் பாதித்த அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே மாரடைப்பால் இறந்துவிட்டதாகக் கூறினர்.அவருக்கு வயது 67 ஆகும்.

 சதீஸ் கவுசிக்கின் மறைவுக்கு நடிகர் அனுபம்ங்கேர்,  கங்கணா ரனாவத் உள்ளிட்ட நடிகர், நடிகைகள், தங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யாரும் பயப்படவேண்டாம்… நான் நலமுடன் திரும்பி வருவேன் –சிவராஜ்குமார் நம்பிக்கை!

கங்குவா படத்தைக் கட்டம் கட்டி விமர்சித்தது தவறு.. பாக்யராஜ் வேதனை!

திரும்பும் பக்கமெல்லாம் பாசிட்டிவ் ரிவ்யூ.. தேசிய விருது உறுதி!? - விடுதலை-2 க்கு கிடைக்கும் மாஸ் வரவேற்பு!

அஜித்தின் அடுத்த படத்தை இயக்கும் லிஸ்ட்டில் இருக்கும் மூன்று இயக்குனர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments