Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு மாதம் நடிகர் நடிகைகளிடம் தேதிகளைப் பெற்ற பொன்னியின் செல்வன் டீம்… எதற்கு தெரியுமா?

Webdunia
செவ்வாய், 16 ஆகஸ்ட் 2022 (15:47 IST)
கல்கி எழுதிய பிரபல நாவலான பொன்னியின் செல்வனை திரைப்படமாக எடுத்து முடித்துள்ளார் மணிரத்னம். இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என பெரிய நடிக பட்டாளமே நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளது.

இதையடுத்து பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘பொன்னி நதி’ பாடல் சில தினங்களுக்கு முன்னர் வெளியானது. வெளியானதில் இருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், பலராலும் விரும்பிக் கேட்கப்படும் ஒரு பாடலாக அமைந்துள்ளது.

இந்நிலையில் படத்துக்கு இந்தியா முழுவதும் ப்ரமோஷன் பணிகளை மேற்கொள்ள படத்தின் முக்கியக் கலைஞர்கள் அனைவரிடமும் தயாரிப்பு நிறுவனம் ஒரு மாதம் தேதிகளைப் பெற்றுள்ளதாம். இதையடுத்து செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் ப்ரமோஷன் பணிகள் மேற்கொள்ளப்படும் என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வாத்தி புகழ் சம்யுக்தா மேனனின் க்யூட் லுக் போட்டோஷூட்!

கார்ஜியஸ் லுக்கில் ஐஸ்வர்யா லெஷ்மி.. கலக்கல் ஃபோட்டோஷூட்!

பான் இந்தியா படமாக உருவாகும் த்ரிஷ்யம் 3… மோகன்லால் கொடுத்த அப்டேட்!

தனுஷ் & ராஜ்குமார் பெரியசாமி இணையும் படத்தில் ஹீரோயினாக ஸ்ருதிஹாசன்!

புஷ்பா 2 படக்குழுவினர் மீது புகார்… கிளம்பிய சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments