Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என் கடமையை செய்தேன்: ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியை தடுத்து நிறுத்திய போலீஸ் அதிகாரி பேட்டி..!

Webdunia
வெள்ளி, 5 மே 2023 (07:41 IST)
இசை அமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசை நிகழ்ச்சி சமீபத்தில் புனே நகரில் நடைபெற்ற போது அந்த நிகழ்ச்சியை தடுத்து நிறுத்திய காவல்துறை அதிகாரிக்கு கண்டனங்கள் குவிந்து வரும் நிலையில் அவர் சமீபத்தில் பேட்டி அளித்துள்ளார். 
 
ஏப்ரல் 30ஆம் தேதி புனே நகரில் ஏ ஆர் ரகுமானின் இசை நிகழ்ச்சி நடைபெற்ற போது பத்து மணி வரை மட்டுமே அனுமதி பெறப்பட்டது. ஆனால் 10 மணிக்கு பிறகு ஏ ஆர் ரகுமான் பாடலை பாடத் தொடங்கிய போது போலீஸ் அதிகாரி ஒருவர் மேடை ஏறி அனுமதிக்கப்பட்ட நேரம் முடிந்து விட்டதால் இசை நிகழ்ச்சி நிறுத்துமாறு சைகை செய்தார். 
 
ஆனால் இசை கலைஞர்கள் அதனை கவனிக்காமல் தொடர்ந்து இசை நிகழ்ச்சியை நடத்தியதால் போலீஸ் அதிகாரி தடுத்து நிறுத்தினார். இதனால் ரசிகர்கள் கூச்சலிட்டனர். ஏஆர் ரகுமான் போலீசாரின் அறிவுறுத்தலுக்கு இணங்கி இசை நிகழ்ச்சி முடித்துக் கொண்டார் 
 
இந்த நிலையில் சந்தோஷ் பாட்டில் என்ற அந்த அதிகாரி பேட்டி அளித்த போது நானும் ஏ ஆர் ரகுமான் ரசிகர் தான், ஆனால் ஒரு காவல்துறை அதிகாரியாக நான் என்னுடைய கடமை செய்தேன். 10 மணிக்கு மேல் இசை நிகழ்ச்சி நடத்த முடியாது என்று நீதிமன்ற உத்தரவை நான் பின்பற்றி உள்ளேன் என்று கூறினார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சந்தானம் நடிக்கும் 'டிடி ரிட்டர்ன்ஸ்' அடுத்த பாகம்!

தனுஷின் ராயன் படத்தின் ரன்னிங் டைம் பற்றி வெளியான தகவல்!

ஹரிஷ் கல்யாணின் அடுத்த படத்தை இயக்கும் ‘றெக்க’ பட இயக்குனர்!

பிரபாஸின் அடுத்த படத்தில் வில்லனாகும் தென்கொரிய நடிகர்… ஸ்பிரிட் அப்டேட்!

ஷாருக் கானின் அடுத்த படத்தில் ஹீரோயின் ஆகும் தமிழ் நடிகை!

அடுத்த கட்டுரையில்
Show comments