Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பேட்ட மாஸ் விஸ்வாசம் க்ளோஸ்: கொலை காண்டு மீம்

பேட்ட மாஸ் விஸ்வாசம் க்ளோஸ்: கொலை காண்டு மீம்
, வெள்ளி, 28 டிசம்பர் 2018 (19:58 IST)
இன்று வெளியாகியுள்ள பேட்ட டிரைலர்தான் தற்போது டிரெண்டிங்.  இந்த காளியோட ஆட்டத்த பார்க்கத்தான போறீங்க என பழைய ரஜினியாக நமக்கு இளமை துள்ளளுடன் வருகிறார் ரஜினி. 
 
டிரெய்லரில் யாரையும் விட்டுவைக்காமல் நவசுதீன் சித்திக், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சிம்ரன், த்ரிஷா மற்றும் சசிக்குமார் ஆகிய அனைவரையும் டிரெய்லரில் காட்டிவிட்டார் கார்த்திக் சுப்பராஜ்.
 
காளியின் ஆட்டத்தையும், விஜய் சேதுபதியின் வேட்டைத் தனத்தையும் பார்க்க ஜனவரி 10 வரை நாம் காத்திருக்க வேண்டும். முக்கியமாக ரஜினி பேசும் பஞ்ச் வசனங்கள் அவரது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 
 
இதில் குறிப்பாக சிறப்பான தரமான சம்பவங்களை இனிமேதான் பார்க்கப்போறீங்க, எவனுக்காவது பொண்டாட்டி புல்லைங்கனு செண்டிமெண்ட் இருந்தா அப்படியே ஓடி போய்டு கொல காண்டுல இருக்கேன் கொல்லாம விட மாட்டேன் என்பவை சிலிர்க்க வைக்கிறது. 
 
தற்போது இந்த வசனத்தை வைத்து அஜித்தின் விஸ்வாசத்திற்கு மீம் கிரியேட் செய்துள்ளனர். இந்த மீம் மூலம் இரு படங்களும் பொங்கலுக்கு வெளியாவதால் பேட்ட எப்படியும் மாஸ் காட்டும் என சொல்லாமல் சொல்லியுள்ளனர். 
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஸ்வாசம் திருவிழா ஆரம்பம் : 200 அடியில் பேனர் - மாஸ் காட்டும் தல!