Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வெளியானது! சிம்புவின் பெரியார் குத்து ஆல்பம் !

Advertiesment
வெளியானது!  சிம்புவின் பெரியார் குத்து ஆல்பம் !
, வெள்ளி, 14 டிசம்பர் 2018 (15:40 IST)
நடிகர் சிம்பு  நடித்திருக்கும் பெரியார் குத்து ஆல்பம் வெளியானது.


 
நடிகர் சிம்பு சினிமாக்களில் நடிப்பது மட்டுமல்லாமல் நடனம், பாடல் என அனைத்திலும் அவருக்கு விருப்பம் அதிகம் உள்ளதால் அடிக்கடி ஆல்பங்களில் பாடி வெளியிடுவார். அந்த வகையில் தற்போது இவர் பெரியார் குத்து என்ற ஆல்பத்தை உருவாக்கியிருக்கிறார். இதனை பாடலாசிரியர் மதன் கார்க்கி எழுதியிருக்கிறார். ரமேஷ் தமிழ்மணி இதற்கு இசை அமைத்திருக்கிறார் . 
 
இதனை தீபன் பூபதி மற்றும் ரத்தீஷ் வேலு ஆகியோர் தயாரித்துள்ளனர். ரெபெல் ஆடியோ நிறுவனம் இந்த ஆல்பத்தை ரிலீஸ் செய்துள்ளது . 
 
உலக புகழ் பெற்ற பாடகர் ஏகான் (Akon) உடன் லவ் அந்தம் பாடலை தொடர்ந்து தற்போது வெளிவந்துள்ள "பெரியார் குத்து ஆலப்பும்" சிம்புவின் மாஸான நடனத்தால் அலறவிடுகிறது. 
 
"உண்மையான நாய் அது நன்றியோடு கெடக்கும், வேஷம் போட்டு வந்த நாய் மானம் கெட்டு குறைக்கும்" போன்ற தத்துவமான பாடல் வரிகள் சிம்புவின் ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வருகிறது . 
 
திராவிட மண்ணின் மைந்தனான சிம்புவின் இப்பாடல் நிச்சயம் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை ஏற்படுத்தும். அதுமட்டுமல்லாமல் விரைவில் லவ் அந்த்தம் பாடலையும் வெளியிடுவார் என ஆர்வத்தில் உள்ளனர் அவரது ரசிகர்கள்.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தொடங்கியது விஜய் சேதுபதியின் அடுத்தப் படம் – மாமனிதன் அப்டேட்