Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பத்து தல படத்தில் சிம்புவுடன் இணைந்த பிரபல நடிகர்

Webdunia
திங்கள், 3 அக்டோபர் 2022 (09:12 IST)
சிம்பு நடித்து வரும் பத்து தல படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது.

கன்னடத்தில் ஹிட்டடித்த மப்டி படத்தை தமிழில் முதலில் அதே பெயரில் ரீமேக் செய்ய முடிவெடுத்தார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா. இந்த படத்தின் நாயகனாக கௌதம் கார்த்திக்கும், முக்கியமான ஒரு வேடத்தில் சிம்பு நடிக்கவும் ஒப்பந்தமாகி சில நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. ஆனால் அதன் பிறகு சிம்பு படப்பிடிப்பில் கலந்து கொள்ளாததால் நிறுத்தப்பட்டது.

இப்போது சில பல மாற்றங்களோடு அந்த படம் மீண்டும் தொடங்கப்பட்டு சிம்பு இல்லாத மற்ற காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு விட்டன. சிம்புவுக்காக படக்குழு காத்திருக்கிறது. இந்நிலையில் இப்போது வெந்து தணிந்தது காடு படத்தை முடித்த சிம்பு கர்நாடகாவில் நடந்த ஷூட்டிங்கில் கலந்து கொண்டார்.

வெந்து தணிந்தது காடு ரிலீஸை ஒட்டி அதன் ப்ரமோஷனில் அவர் கலந்துகொண்ட நிலையில் இப்போது மீண்டும் சென்னையில் ஷூட்டிங் தொடங்கியுள்ளது. அதில் சிம்பு சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்போது படத்தில் மெட்ராஸ், கபாலி படங்களில் நடித்து பிரபலம் ஆன நடிகர் கலையரசன் இணைந்துள்ளார். இதை அவரே தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிறுவன் ஸ்ரீதேஜ் உடல்நிலை குறித்து கவலை… வழக்கு நடப்பதால் சந்திக்க முடியவில்லை – அல்லு அர்ஜுன் வருத்தம்!

பிரபல தபேலா கலைஞர் ஜாகிர் உசேன் காலமானார்!

பத்தே நாட்களில் இந்த ஆண்டில் அதிக வசூல் செய்த படமாக சாதனை படைத்த புஷ்பா 2!

ஸ்ரீவில்லி புத்தூர் ஆண்டாள் கோயில் அர்த்த மண்டபத்துக்குள் சென்ற இளையராஜா தடுத்து நிறுத்தம்!

அரசு ஹோட்டலை நான் விலைக்குக் கேட்டேனா?... விக்னேஷ் சிவன் விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments