Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா விஜய் இயக்கத்தில் ஜீவா & அர்ஜுன்…. பாதி முடிந்த படத்தைக் கைப்பற்றிய முன்னணி நிறுவனம்

Webdunia
திங்கள், 22 ஆகஸ்ட் 2022 (15:18 IST)
பா விஜய் இயக்கத்தில் அர்ஜுன் மற்றும் ஜீவா நடிப்பில் மேதாவி என்ற படம் தொடங்கப்பட்டு பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

தமிழ் திரையுலகின் பிரபல பாடலாசிரியர்களில் ஒருவர் பா விஜய். இவர் ஏற்கனவே ஞாபகங்கள் மற்றும் ஸ்ட்ராபெர்ரி ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார் என்பதும் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவர் இயக்கத்தில் பிரம்மாண்டமான படமாக ஜீவா மற்றும் அர்ஜுன் நடிப்பில் மேதாவி தொடங்கப்பட்டது.

ஆனால் தொடங்கி பாதி படம் முடிந்த நிலையில் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதற்கு காரணம் நடந்த சில நாட்கள் படப்பிடிப்பிலேயே கிட்டத்தட்ட பல கோடி ரூபாய் செலவாகிவிட்டதாம். அதனால் மேற்கொண்டு படத்தை எடுக்காமல் அப்படியே கிடப்பில் போட்டுவிட்டாராம் தயாரிப்பாளர். படத்தின் பட்ஜெட் அதிகமானதற்கு முக்கியக் காரணம் இந்த படம் ஒரு பீரியட் படம்தான் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது இதுவரை எடுத்தக் காட்சிகளை எல்லாம் எடிட் செய்து போட்டுக் காட்டி படத்தை மேற்கொண்டு முடிக்க தயாரிப்பாளர் ஐசரி கணேஷை சம்மதிக்க வைத்துள்ளாராம். விரைவில் வேல்ஸ் நிறுவனம் சார்பாக மேதாவி திரைப்படம் மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

தமிழன் இந்தியாவிற்கு தலைமை தாங்க வேண்டும்.. எந்த I.N.D.I.Aவை சொல்றார்! – இந்தியன் 2 பட விழாவில் கமல்ஹாசன்!

இசைஞானி பிறந்தநாள்: அசத்தல் போஸ்டரை வெளியிட்ட ‘இளையராஜா’ படக்குழு!

மகள் பவதாரணி மரணம்..! தனது பிறந்தநாளை புறக்கணித்த இளையராஜா..!!

அண்ணனுக்கும் பிறந்த நாள்.. தம்பிக்கும் பிறந்த நாள்.. இரட்டிப்பு சந்தோஷம்: கமல்ஹாசன்

நிவேதா பெத்துராஜ் வீடியோவின் மர்மம் இதுதான்.. இதுக்கு தானா இந்த அலப்பற..!

அடுத்த கட்டுரையில்
Show comments