Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா ரஞ்சித்தின் அடுத்த படத்தில் முக்கிய வேடத்தில் மாறன்… வெளியான போஸ்டர்!

Webdunia
புதன், 30 மார்ச் 2022 (08:30 IST)
இயக்குனர் பா ரஞ்சித் அடுத்து தயாரித்துள்ள படத்தில் லொள்ளு சபா மாறன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளதாக தெரிகிறது.

அட்டக்கத்தி’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆன பா.ரஞ்சித், மெட்ராஸ் என்ற ஒரு சூப்பர் ஹிட் படத்தை இயக்கியதால் இரண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ மற்றும் ‘காலா’ ஆகிய படங்களை இயக்கும் வாய்ப்பை பெற்றார். இந்த நிலையில் நீலம் புரொடக்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கிய பா ரஞ்சித், பரியேறும் பெருமாள் மற்றும் ‘குண்டு’, ரைட்டர் ஆகிய திரைப்படங்கள் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றியைப் பெற்றன.

இந்நிலையில் இப்போது நீலம் புரொடக்‌ஷன் அடுத்து தயாரிக்கும் படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் ஊர்வசி, அட்டகத்தி தினேஷ் மற்றும் லொள்ளு சபா மாறன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு J பேபி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. வித்தியாசமாக உருவாக்கப்பட்டுள்ள அந்த போஸ்டர் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கடைசி நேரத்தில் 8 நிமிடங்கள் காட்சி நீக்கப்பட்டது: ‘விடுதலை 2’ குறித்து வெற்றிமாறன்..!

கிறிஸ்டோஃபர் நோலனுக்கு சர் பட்டம் வழங்கி கௌரவித்த பிரிட்டன் மன்னர்!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கண்கவர் புகைப்பட ஆல்பம்!

க்யூட் போஸில் கலக்கும் ‘பாபநாசம்’ புகழ் எஸ்தர்!

இந்தியன் 3 ஓடிடியில் ரிலீஸ் ஆகுமா?... இயக்குனர் ஷங்கர் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments