மறைந்த ஸ்டண்ட் கலைஞர் குடும்பத்துக்கு பா ரஞ்சித் நிதியுதவி அறிவிப்பு!

vinoth
செவ்வாய், 22 ஜூலை 2025 (10:17 IST)
இயக்குனர் பா ரஞ்சித் இயக்கம் மற்றும் தயாரிப்பில் வேட்டுவம் என்ற படம் உருவாகி வருகிறது. இதில் தினேஷ் மற்றும் ஆர்யா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

இந்த படத்திற்கான சண்டை காட்சி ஒன்று சில நாட்களுக்கு முன்னர் நாகப்பட்டினத்தில் படமாக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது கார் ஸ்டண்ட் மாஸ்டரான மோகன்ராஜ் என்பவர் ஒரு அபாயமான ஸ்டண்ட் காட்சியில் நடித்தபோது விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இது தமிழ் சினிமவில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.

மோகன் ராஜ் தமிழ் சினிமாவில் கார் ஸ்டண்ட் காட்சிகளை வெகு சிறப்பாக செய்யும் ஸ்டண்ட் கலைஞர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் பா ரஞ்சித் மோகன் ராஜின் குடும்பத்துக்கு 20 லட்ச ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார். ஏற்கனவே நடிகர் சிம்பு ஒரு லட்ச ரூபாய் நிதியுதவி அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மனசு கஷ்டப்பட்டுத்தான் போயிருக்காரு.. ஏவிஎம் சரவணன் மறைவிற்கு காரணம்

நான் சிறை செல்ல எனது முன்னாள் மனைவி மஞ்சு வாரியர்தான் காரணம்: நடிகர் திலீப் பகிரங்க குற்றச்சாட்டு

கணவர் ப்ரஜினுக்காக பிக் பாஸ் வீட்டை விட்டு ஓடிய சான்ட்ரா: பரபரப்பு சம்பவம்!

23வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழா: திரையிட தேர்வான 12 புதிய தமிழ் திரைப்படங்கள்!

அரசாங்கம் செய்ய வேண்டிய வேலை.. கம்பேக் கொடுத்த கேபிஒய் பாலா.. இதுல சிம்புவுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments