Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஸ்கர் விருதை பெற்றவர்கள் அதை விற்கலாமா? எவ்வளவு கிடைக்கும்?

Webdunia
புதன், 15 மார்ச் 2023 (07:56 IST)
சமீபத்தில் ஆஸ்கர் விருது வழங்கப்பட்ட நிலையில் இந்தியாவுக்கு இந்த ஆண்டு இரண்டு ஆஸ்கர் விருது கிடைத்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.  இந்த நிலையில் ஆஸ்கர் விருது என்பது உலக அளவில் மதிப்பிற்குரிய ஒரு விருதாக கருதப்படும் நிலையில் இந்த விருதை பெற்றவர்கள் அதை விற்க முடியாது என்ற தகவல் வெளியாகி உள்ளன. 
 
ஆஸ்கர் விருதை பெற்றவர்களோ அவர்களுடைய வாரிசுதாரர்களாக இந்த விருதை விற்பதற்கு உரிமை இல்லை என்றும் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின்னர் தான் ஆஸ்கர் விருது வழங்கப்படுகிறது என்றும் கூறப்படுகிறது. 
 
ஒருவேளை ஆஸ்கார் விருதை விற்க வேண்டும் என்று அந்த விருதை பெற்றவர்கள் எண்ணினால் ஆஸ்கர் விருது அமைப்பிடமே திரும்ப கொடுத்துவிட வேண்டும் என்றும் அதற்காக அவர்களுக்கு ஒரு டாலர் மட்டும் பணம் கொடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. 
 
ஆனால் கடந்த 1950களில் ஆஸ்கர் விருதை வறுமை காரணமாக சிலர் விற்பனை செய்துள்ளதாகவும் ஆயிரக்கணக்கான மற்றும் லட்சக்கணக்கான டாலர்களுக்கு விற்பனை செய்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

இதெல்லாம் நடக்குற காரியமாங்க..! ஏ.வி.எம் நிறுவனத்திற்கு எம்.ஜி.ஆர் விட்ட சவால்..!

சினிமால அந்த விஷயத்துல தொடர்ந்து தோத்துட்டேன்.! ஓப்பனாக ஒத்துக்கொண்ட இயக்குனர் சுந்தர் சி..!

சமந்தாவின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

மாளவிகா மோகனனின் கிளாமர் ட்ரஸ் போட்டோஷூட்!

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் வழங்கும் ‘அஞ்சாமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

அடுத்த கட்டுரையில்
Show comments