Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர்விமல் படத்தயாரிப்பிற்காக வாங்கிய கடனை வட்டியுடன் திருப்பித்தர சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு....

J.Durai
வியாழன், 29 ஆகஸ்ட் 2024 (15:21 IST)
நடிகர் விமல் நாயகனாக நடித்து, தயாரித்து வெளியான "மன்னர் வகையறா" திரைப்படத்திற்கு அரசு பிலிம்ஸ் கோபி என்பவர் ரூ.5 கோடி கடனாக கொடுத்திருந்தார். 
 
படம் வெளியாகும் சமயத்தில் வட்டியுடன் திருப்பித் தருவதாக கூறிய விமல் சொன்னபடி கோபியிடம் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. 
 
இதனால் 2020 ஆம் ஆண்டு சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் விமல் மீது காசோலை மோசடி வழக்கு தொடர்ந்தார் கோபி.
 
இதனை மழுங்கடிப்பதற்காகவும், பணம் கொடுக்காமல் தப்பிப்பதற்காகவும் கோபி, சிங்காரவேலன் ஆகியோர் மீதுவிருகம்பாக்கம் காவல் நிலையத்தில் மோசடி புகார் ஒன்றை அளித்தார் நடிகர்விமல். 
 
இந்நிலையில் விமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுக்கப்பட்டு, தயாரிப்பாளர்கள் சங்கத்தில் நடந்த விசாரணயின் முடிவில் விமல் மற்றும் கோபிக்கு இடையே சமரசம் ஒப்பந்தம் ஏற்பட்டு, 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ரூபாய் 3 கோடியை ஓராண்டு காலத்திற்குள் திருப்பித்தருவதாக விமல் சமாதான ஒப்பந்தம் செய்து கொடுத்தார்.
 
ஓராண்டு கடந்தும் பணம் தராததால் 2022-ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் கோபி. 
 
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கோபியிடம்உள்ள ஆவணங்களை ஆராய்ந்து,அதன் அடிப்படையில் ரூபாய் 3 கோடியை 18 சதவீத வட்டியுடன் திருப்பி செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

160 கோடி ரூபாய் பட்ஜெட்.. வசூல் 50 கோடிதான்… அப்செட்டில் அட்லி!

கலர்ஃபுல் உடையில் கலக்கலான போஸ் கொடுத்த அதிதி ஷங்கர்..!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் க்யூட் ஃபோட்டோ கலெக்‌ஷன்!

பா விஜய் இயக்கத்தில் ஜீவா, அர்ஜுன் நடிக்கும் ‘அகத்தியா’ .. கவனம் ஈர்க்கும் மிரட்டலான டிசர்!

சசிகுமார் & சிம்ரன் நடிக்கும் ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

அடுத்த கட்டுரையில்
Show comments