Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அப்ப ஒரு கோடி, இப்ப ஒரு கோடி… மொத்தம் இரண்டு கோடி தருகிறாரா ரஜினி?

Webdunia
வெள்ளி, 23 ஜூன் 2017 (12:10 IST)
நதிகள் இணைப்புக்காக ரஜினி எத்தனை கோடி கொடுத்துள்ளார் என்று நக்கலாகப் பேசிக் கொள்கிறார்கள்.



சில நாட்களுக்கு முன்பு ரஜினியைச் சந்தித்தார் நதிகள் இணைப்பு போராட்டக்குழு தலைவர் அய்யாக்கண்ணு. விவசாயிகளுக்காக சில கோரிக்கைகளை பிரதமரின் காதில் போட்டு வைக்குமாறு கூறியவர், நதிகளை இணைக்க ரஜினி தருவதாகச் சொன்ன ‘அந்த ஒரு கோடி’யைக் கேட்டிருக்கிறார். உடனே அந்தத் தொகைக்கு செக் எழுதி அய்யாக்கண்ணுவிடம் நீட்டினாராம் ரஜினி. அதை மறுத்த அய்யாக்கண்ணு, ‘பிரதமர்கிட்டயே அதையும் கொடுத்துவிடுங்கள்’ என்றாராம்.

பிளாஷ்பேக்… போன வருடம் இதே ஜூன் மாதம் தஞ்சைப் பெரியகோயிலுக்கு வந்த ரஜினியின் அண்ணன் சத்யநாராயணனிடம், அந்த ஒரு கோடி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. ‘அந்தப் பணத்தை அப்போதே தேசிய வங்கியில் டெபாஸிட் செய்துவிட்டோம். நதிகள் இணைப்புக்கு நாள் குறிக்கப்படும்போது அந்தப் பணம் தரப்படும்’ என்றார். அப்படி டெபாஸிட் செய்யப்பட்டிருந்தால், அய்யாக்கண்ணுவிடம் ரஜினி ஏன் செக் தரவேண்டும்? சம்பந்தப்பட்ட வங்கியின் விவரங்களைத் தெரிவித்தாலே போதுமே என்று கேள்வி எழுப்புகிறார்கள் சிலர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன்… இயக்குனர் ஷங்கர் பாராட்டு!

விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி… காரணம் என்ன?

ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?

அடுத்த கட்டுரையில்
Show comments