Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனிதனாகவும் உயர்ந்துகொண்டே செல்லும் விஜய் சேதுபதி

Webdunia
வெள்ளி, 23 ஜூன் 2017 (11:38 IST)
நல்ல நடிகர் என்று பெயரெடுத்த விஜய் சேதுபதி, நல்ல மனிதன் என்றும் பெயரெடுத்துள்ளார்.


 


ஒரு ஹீரோவிடம் கதைசொல்லி கால்ஷீட் வாங்குவது என்பது, தலைகீழாக நின்று தண்ணீர் குடிப்பது போல் கஷ்டமான விஷயம். ஹீரோவைச் சந்திப்பதற்கே மூக்கால் முக்க வேண்டிய காலம் இது. அப்படி கஷ்டப்பட்டு விஜய் சேதுபதியைச் சந்தித்து கதை சொல்லியிருக்கிறார் புதுமுக இயக்குநர் ஒருவர். விஜய் சேதுபதிக்கும் கதை பிடித்துவிட்டது. ஆனால், அதில் ஒரு சிக்கல்.

“எனக்கு இந்தக் கதை பிடிச்சிருக்கு. ஆனா, நிறைய படங்கள்ல நடிச்சிகிட்டு இருக்கேன். அதனால், என்னால இப்போதைக்கு கால்ஷீட் தரமுடியாது. அதுக்காக, உங்களை மாதிரி நல்ல இயக்குநர்களை காக்க வைக்கவும் முடியாது. நானே ஒரு கோடி ரூபாய் தாரேன். புதுமுகங்களை வச்சு படம் பண்ணுங்க. படம் நல்லாருந்தா, நானே ரிலீஸ் பண்ணித் தாரேன். அதுக்குள்ள நானும் கமிட்மெண்ட்ஸை முடிச்சிடுவேன். அப்புறமா நாம சேர்ந்து படம் பண்ணலாம்” என்று சொல்லியிருக்கிறார் விஜய் சேதுபதி. அதைக் கேட்டதும், இயக்குநராக அறிமுகமாகவிருக்கும் அந்த நபருக்கு கண்கலங்கி விட்டதாம்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பேச்சிலர் புகழ் திவ்யபாரதியின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

மூன்று ஹீரோக்களை வைத்து அடுத்த படத்தை இயக்கும் பா ரஞ்சித்… அவரே கொடுத்த அப்டேட்!

மீண்டும் சூர்யாவுடன் இணைய வாய்ப்பிருக்கிறதா?... இயக்குனர் பாலா அளித்த பதில்!

விக்ரம் பற்றிய கேள்வி… நேர்காணலில் இயக்குனர் பாலாவின் ரியாக்‌ஷன் இதுதான்!

கையில் பாம்பை சுற்றிக்கொண்டு கார் ரைட்… அடுத்த சர்ச்சையில் சிக்கிய டிடிஎஃப் வாசன்!

அடுத்த கட்டுரையில்
Show comments