Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓவியா உடன் காதல் இல்லை ஆரவ் மீண்டும் விளக்கம்

Webdunia
வியாழன், 8 நவம்பர் 2018 (11:33 IST)
பிக்பாஸ் முதல் சீசனில் ஒன்றாக பங்கேற்ற ஓவியா மற்றும் ஆரவ், காதலிப்பதாக  செய்திகள் வெளிவந்து மக்கள் மத்தியில் பிரபலமானார்கள். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றிக்கு ஒரு உந்துகோலாக இருந்தது ஆரவ் , ஓவியாவின் காதல் கதை தான்.ஆனால் தற்போது ஆரவ் எங்களுக்குள் காதல் இல்லை என்று கூறி புதிய விளக்கத்தை தந்துள்ளார்.
இதுகுறித்து சமீபத்தில் பேசிய ஆரவ்  ராஜபீமா என்கிற படத்தில் நடித்து வருகிறேன். இன்னும் அடுத்தடுத்து நடிக்கும் படங்கள் குறித்த அறிவிப்புகள் தொடர்ந்து வெளிவரும். 
 
சமீபத்தில் நடைபெற்ற எனது பிறந்தநாளுக்கு ஓவியா நேரில் வந்து எனக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும் சிம்பு, பிந்து மாதவி உள்ளிட்டோரும் என் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.
 
ஓவியா உடன் எனக்கு காதல் என்பதெல்லாம் சுத்த பொய். அவர் எனக்கு நல்ல தோழி மட்டுமே. விரைவில் நாங்கள் சேர்ந்து நடிக்கும் படத்தை பற்றிய  அறிவிப்பும்  வெளிவரலாம் என்று ஆரவ் தெரிவித்தார். 
 
காதலிக்கும் இளைஞனாக  இளைஞனாக என்னை நடிக்கச்சொல்லி பலரும் கேட்கின்றனர். இது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. ஓவியா உடன் இணைந்து விரைவில் படம் நடிக்கும் வாய்ப்பு இருக்கிறது என்றார் ஆரவ். 

தொடர்புடைய செய்திகள்

விஜயகாந்த் மகனுக்காக விஜய் செய்யப் போகும் உதவி… ஒரே கல்லுல ரெண்டு மாங்கா!

கோட் பட பணிகளை ஜூலை மாதத்துக்கு தள்ளிவைத்த விஜய்… என்ன காரணம்?

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தில் சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுக்கும் நயன்தாரா!

எம் எஸ் சுப்புலட்சுமியின் பயோபிக்கில் நடிக்கப் போகும் நடிகை யார்?

திரைக்கதை உரிமை எங்களிடம் இருக்கிறது... ராமாயணம் ஷூட்டிங்கை நிறுத்திய தயாரிப்பாளர்

அடுத்த கட்டுரையில்
Show comments