Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலிவுட்டை வாரி சுருட்டிய நெட்பிளிக்ஸ் – மொத்தமாக 17 படங்கள் வெளியீடு!

Webdunia
வியாழன், 16 ஜூலை 2020 (13:39 IST)
கொரோனா லாக்டவுன் காரணமாக திரையரங்கங்கள் திறப்பதில் தாமதம் ஏற்படுவதால் ஓடிடி பிளாட்பார்ம்களில் படங்களை ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கிட்டத்தட்ட 4 மாதங்களாகிவிட்டது இந்தியாவில் திரையரங்குகள் மூடப்பட்டு. இதனால் தயாரித்து முடிந்த பல படங்கள் ரிலிஸாகாமல் காத்துக் கிடக்கின்றனர். இந்த காத்திருப்பால் தயாரிப்பாளர்களுக்கு பலகோடி நஷ்டம் ஏற்படும் என சொல்லப்படுகிறது. அப்படி இருந்தும் திரையரங்குகள் திறக்கும் தேதி குறித்த திட்டவட்டமான அறிவிப்புகள் எதுவும் இல்லை.

அதனால் தயாரிப்பாளர்கள் ஓடிடி பக்கம் தாவ முனைப்பு காட்டி வருகின்றனர். அமேசான் ப்ரைம் தமிழில் சில படங்களை ரிலீஸ் செய்தது முன்னுதாரணமாக அமைந்தது. அதே நெட்பிளிக்ஸ் இப்போது ஒட்டுமொத்தமாக 17 திரைப்படங்கள் மற்றும் சீரியல்களை நேரடியாக ரிலீஸ் செய்ய முன்வந்துள்ளது. அவை அனைத்தும் பாலிவுட் படைப்புகள் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த முன்னோட்டத்தை இப்போது வெளியிட்டுள்ளது.

அந்த 17 படைப்புகளாவன:-

குஞ்சான் சக்ஸேனா, டோர்பாஸ், டோலி கிட்டி அவ்ர் வோ சமாக்தே சிதாரே, ராட் அகேலி ஹாய், லூடோ, க்ளாஸ் ஆஃப் 83, ஜின்னி வெட்ஸ் சன்னி, எ சூட்டபிள் பாய், மிஸ்மேட்ச்டு, ஏகே vs ஏகே, சீரியஸ் மேன், ட்ரிப்ஹான்கா, காலி குஹி, பாஹ் பியனி பாஹ், பாம்பே பிஹம்ஸ், மசாபா மசாபா

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என்னுடைய அடுத்த படத்தில் பல ஆச்சர்யங்கள் காத்திருக்கின்றன… அட்லி கொடுத்த அப்டேட்

பொங்கலுக்கு வருகிறது சிவகார்த்திகேயனின் அடுத்த பட டைட்டில் டீசர்!

அல்லு அர்ஜுன் கைதுக்குக் காரணமான கடிதம்… ஜாமீனை ரத்து செய்ய மேல்முறையீடா?

’விடாமுயற்சி’ ரிலீஸ் தேதியை உறுதி செய்த லைகா.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

நான் எழுதிய கதைகளில் விஜயகாந்த் வில்லன்… இயக்குனர் பா ரஞ்சித் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments