Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் இருந்து அன்னப்பூரணி படம் நீக்கம்!

Sinoj
வியாழன், 11 ஜனவரி 2024 (13:30 IST)
நயன்தாராவின் அன்னப்பூரணி படம் நெட்பிளிக்ஸ்-ன் ஓடிடி தளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை நயன்தாரா.  இவரது  75வது  படம் அன்னப்பூரணி. இந்த படத்தில் ஹீரோவாக  ஜெய் நடித்திருந்தார். இவர்களுடன் சத்யராஜ் மற்றும் ரெட்டின்ஸ் கிங்ஸ்லீ ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க, நிலேஷ் கிருஷ்ணா என்ற அறிமுக இயக்குனர் படத்தை இயக்கியிருந்தார்.. தமன் இசையமப்பில் பாடல்களும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

ஜீ ஸ்டுடியோ நிறுவனம் தயாரிப்பில்,  நயன்தாரா நடிப்பில் உருவான அன்னப்பூரணி கடந்தாண்டு  டிசம்பர் 1 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள தியேட்டர்களில் ரிலீஸானது.

ராஜா ராணி படத்திற்குப் பின் ஜெய், நயன்தாரா இருவரும் இணைந்து நடித்திருந்த இப்படம் ரசிகர்களிடம் எதிர்பார்பபு கூடியது.

எனவே சமீபத்தில் வெளியான இப்படம் திரையங்கில் வெற்றிகரமாக ஓடியது. அதன்பின்னர், இப்படத்தை வாங்கியிருந்த நெட்பிளிக்ஸில் ஓடிடி தளத்திலும் வெளியானது.

ஆனால், இப்படத்தில், இந்து மத உணர்வுகளை புண்படுத்தியதாக சர்ச்சை எழுந்தது. அதாவது, ராமர் அசைவம் சாப்பிட்டதாக இப்படத்தில் வசனம் இருந்த நிலையில், இப்படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் இருந்து  நீக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

புஷ்பா 2 படத்தின் இசையமைப்பாளர் மாற்றம்… DSPக்குப் பதில் தமன் வந்த பின்னணி என்ன?

சினிமாவில் 40 ஆண்டுகளை நிறைவு செய்த சிம்பு.. கொண்டாட்டத்துக்குத் தயாரான TR!

சூர்யாவின் ‘ஃபீனிக்ஸ்’ படத்தில் த வெ கா கொடியா?... சென்சாரில் வந்த பிரச்சனை!

சித்தார்த் நடிக்கும் ‘மிஸ் யூ’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஓடிடியில் ரிலீஸான ரஜினிகாந்தின் ‘வேட்டையன்’!

அடுத்த கட்டுரையில்
Show comments