Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் அந்த பிரச்சனை வராமல் தவிர்த்திருக்கலாம் – நெப்போலியன் ஆதங்கம்!

Webdunia
வியாழன், 24 டிசம்பர் 2020 (09:51 IST)
நடிகர் நெப்போலியன் தனக்கும் விஜய்க்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடு குறித்து பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகர் நெப்போலியன். அவர் சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். குணச்சித்திர வேடங்களில் நடித்த அவர் ஒரு கட்டத்தில் தனது மகனின் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்காவில் இப்போது வசித்து வருகிறார்.  இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் தான் விஜய்யோடு பேசுவதில்லை என்றும் அவர் படங்களைப் பார்ப்பதில்லை என்றும் கூறியிருந்தார்.

விஜய்யுடன் ‘போக்கிரி’ படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்தவர் நெப்போலியன். இந்த படத்தின் படப்பிடிப்பின்போது விஜய்யுடன் தனக்கு சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாகவும், இந்த படத்தில் பிரபுதேவாவுக்காகவே நடித்தேன் என்றும் மேலும் நெப்போலியன் அந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த பேச்சு இணையத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இப்போது அளித்துள்ள நேர்காணல் ஒன்றில் அவர் ‘அந்த பிரச்சனைக்கு சூழ்நிலையும் விஜய்யின் அனுகுமுறையுமே காரணம். அவர் நினைத்திருந்தால் பிரச்சனை வராமல் தடுத்திருக்கலாம்’ என்று கூறியுள்ளார். ஆனால் இனிமேல் விஜய் என்னை அழைத்து அவர் படத்தில் நடிக்க சொன்னால் நடிக்க தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஸ்டன்னிங்கான லுக்கில் கலக்கும் அனிகா சுரேந்திரன்!

கார்ஜியஸ் லுக்கில் அதுல்யா ரவியின் ஸ்டன்னிங்கான போட்டோஷுட் ஆல்பம்!

புதிய படத்துக்காக கூட்டணி போடும் ஆவேஷம் இயக்குனரும் மஞ்சும்மள் பாய்ஸ் இயக்குனரும்.!

பாலிவுட்டை விட்டு வெளியேறுகிறேன்… இயக்குனர் அனுராக் காஷ்யப் ஆதங்கம்!

என்ன வரிசையா வறாங்க.. தள்ளிப்போன விடாமுயற்சி! பொங்கலுக்கு படையெடுக்கும் 9 படங்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments