Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“என்னை கதாநாயகனாக்கிய மனிதர்…” பிரதாப் போத்தனுக்கு நடிகர் நெப்போலியன் அஞ்சலி!

Webdunia
வெள்ளி, 15 ஜூலை 2022 (15:38 IST)
நடிகரும் இயக்குனருமான பிரதாப் போத்தன் இன்று காலை இயற்கை எய்தினார்.

தமிழ் சினிமாவில் 80களில் பிரபலமாக இருந்த நடிகர்களில் முக்கியமானவர் பிரதாப் போத்தன். பன்னீர் புஷ்பங்கள், அழியாத கோலங்கள் உள்ளிட்ட சுமார் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். நடிப்பதோடு மட்டுமல்லாமல் இயக்குனராகவும் பல ஹிட் படங்களை அளித்தவர் பிரதாப்.

இவர் இயக்கத்தில் வெளியான சீவலப்பேரி பாண்டி, லக்கி மேன், வெற்றி விழா உள்ளிட்ட படங்கள் தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தகுந்த ட்ரெண்ட் செட்டிங் படங்களாக அமைந்தவை. பிரபல நடிகை ராதிகாவை இவர் திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவரும் விவாகரத்து செய்து கொண்ட நிலையில் அமலா சத்யநாத் என்ற பெண்ணை மணந்து கொண்டார்.

இந்நிலையில் இன்று காலை அவர் சென்னையில் உள்ள தனது வீட்டில் காலாமாகினார். இதையடுத்து திரையுலகைச் சேர்ந்தவர்கள் பலர் அவருக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் நடிகர் நெப்போலியன் பிரதாப் போத்தனுக்கு வெளியிட்டுள்ள அஞ்சலி குறிப்பில் “எனது கண்ணீர் அஞ்சலி..!

எனது அன்புக்குள்ள திரைப்பட இயக்குனர் நடிகர் திரு பிரதாப் போத்தன் அவர்களின் மறைவிற்கு எனது அஞ்சலியையும், அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்களையும் , வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்..! எனது திரையுலக வாழ்க்கையில் என்னை கதானாயகனாக உயர்த்திய “சீவலப்பேரிபாண்டி” என்ற திரைப்படத்தை இயக்கிய மாபெரும் மனிதர் நம்மை விட்டு மறைந்துவிட்டார்..!
அவரது புகழ் உயர்ந்து நிற்க்கட்டும்..!” என தெரிவித்துள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nepoleon Duraisamy (@nepoleon_duraisamy)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆங்கிலத்தில் ஏ ஐ தொழில்நுட்பம் மூலமாக டப் ஆகும் சிம்புவின் சூப்பர் ஹிட் திரைப்படம்!

நேர்காணல் கேட்ட சன் டிவி… நோ சொன்ன விஜய்- இதனால்தான் கோட் வியாபாரம் கைமாறியதா?

தசாவதாரம் படத்தில் தான் செய்த சாதனையை இந்தியனில் முறியடிக்கும் கமல்ஹாசன்!

ரகுல் ப்ரீத் சிங்கின் கணவருக்கு 250 கோடி ரூபாய் நஷ்டம்.. சொத்துகளை விற்ற சோகம்!

கங்கனா நடித்த எமர்ஜென்ஸி படத்தின் புது ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments