Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினி படத்துக்கான வேலைகளை தொடங்கிய நெல்சன்!

Webdunia
வியாழன், 3 பிப்ரவரி 2022 (10:00 IST)
இயக்குனர் நெல்சன் இப்போது விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்கி முடித்து பின் தயாரிப்புப் பணிகளை நடத்தி வருகிறார்.

வேட்டை மன்னன் என்ற படத்தை இயக்கிய நெல்சன் அந்த படம் கிடப்பில் போடப்பட்டதால் 6 ஆண்டுகளுக்கு எந்த வாய்ப்பும் இல்லாமல் இருந்தார். அதன்பின்னர் அவர் இயக்கிய கோலமாவு கோகிலா படம் வெற்றி பெற்றதை அடுத்து இப்போது டாக்டர் மற்றும் பீஸ்ட் என உச்சநடிகர்களை இயக்கி முன்னணி இயக்குனராகியுள்ளார்.

இந்நிலையில் அண்ணாத்த படத்துக்குப் பிறகு ரஜினி அடுத்து நடிக்கப்போகும் படத்தை இயக்கும் இயக்குனர்கள் பட்டியலில் நெல்சனின் பெயரும் உள்ளதாம். அதுமட்டுமில்லாமல் ரஜினி கூட நெல்சன் இயக்கத்தில் நடிக்கவே அதிக ஆர்வம் காட்டுவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் பீஸ்ட் பணிகளுக்கு இடையே ரஜினி படத்துக்கான கதையை நெல்சன் தொடங்கியுள்ளதாகவும், விரைவில் அதை ரஜினியிடம் சொல்ல உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் உடையில் ஸ்டைலான போஸ்களில் திவ்யா துரைசாமி… லேட்டஸ்ட் ஆல்பம்!

கிளாமர் உடையில் ஸ்டன்னிங்கான போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

யாருக்காக ஓடுகிறதோ இல்லையோ… இவருக்காக இந்தியன் 2 ஓடவேண்டும்- சித்தார்த் நெகிழ்ச்சி!

ஒருவழியாக தான் இயக்கவுள்ள கில்லர் படத்தின் வேலைகளைத் தொடங்கிய எஸ் ஜே சூர்யா!

ஓடிடி மற்றும் சாட்டிலைட் வியாபாரத்தில் சாதனை படைத்த ஜெயம் ரவியின் ‘பிரதர்’ திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments