Publish Date: Thu, 03 Feb 2022 (08:01 IST)
Updated Date: Thu, 03 Feb 2022 (08:02 IST)
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38,50,14,039 ஆக அதிகரித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 38.50 கோடியாக அதிகரித்துள்ளது.
ஆம், தற்போது கொரோனா வைரஸ் 221 நாடுகளில் பரவியுள்ள நிலையில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38,50,14,039 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 7,42,91,142 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதோடு கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 30,50,5847 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 57,17, 50 பேர் உயிரிழந்துள்ளனர். அதிலும் கடந்த 24 மணி நேரத்தில் 11,328 பேர் தொற்றுக்கு பலியாகி இருப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது.