Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

’வெந்து தணிந்தது காடு’ படத்தில் இணைந்த ‘தி பேமிலிமேன்’ நடிகர்!

’வெந்து தணிந்தது காடு’ படத்தில் இணைந்த ‘தி பேமிலிமேன்’ நடிகர்!
, சனி, 26 மார்ச் 2022 (17:56 IST)
சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் ஏ ஆர் ரகுமான் இசையில் வேல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வெந்து தணிந்தது காடு. 
 
இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில் விரைவில் படப்பிடிப்பு முடிந்து விடும் என்று கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் இந்த படத்தில் தி ஃபேமிலிமேன் உள்பட பல திரைப்படங்களில் நடித்த மலையாள நடிகர் நீரஜ் மகாதேவன் என்பவர் இணைந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் இந்த படத்தில் ஸ்ரீதரன் என்ற கேரக்டரில் நடித்துள்ளார். இந்த அறிவிப்பு படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’தலைவர் 169’ படத்தின் டைட்டில் இதுதான்: நெல்சன் முடிவு!