நடிகை நஸ்ரியா தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.
தமிழிலும் மலையாளத்தில் சில படங்களில் மட்டுமே நடித்த நடிகை நஸ்ரியா அனைவராலும் விரும்பப்படும் கதாநாயகியாக இருந்தார். இதையடுத்து அவர் 2014 ஆம் ஆண்டு பகத் பாசிலை திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் அவர் திரையுலக வாழ்வில் இருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் கடந்த 2018 ஆம் ஆண்டு ஒரு படத்திலும் இந்த ஆண்டு இரண்டு மலையாளப் படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது அவர் தெலுங்கில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் நானி ஹீரோவாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் இந்தி பாடல் ஒன்றுக்கு நடனமாடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ இப்போது வைரலாக பரவி வருகிறது.