Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கமல்ஹாசனுக்கு ஜோடியாகும் நயன்தாரா?

nayanthara
, புதன், 25 அக்டோபர் 2023 (17:51 IST)
மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டு பாகங்களும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன.

இந்நிலையில் மணிரத்னம் நாயகன் படத்துக்குப் பிறகு 35 ஆண்டுகள் கழித்து கமல்ஹாசனுடன் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றுகிறார். இப்படத்தில் ரவி கே சந்திரன் ஒளிப்பதிவாளராக பணியாற்ற உள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தின் ப்ரமோஷன் வீடியோ கமல்ஹாசனின் பிறந்தநாளான நவம்பர் 7 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் ஷூட்டிங் அடுத்த ஆண்டு தொடங்கும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், கமல்-மணிரத்னம் இணையும் இப்படத்தின் கமலுக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

இப்படத்தில் நடிக்க திரிஷா,  வித்யா பாலன் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடந்த நிலையில், தற்போது நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

Femi9 வெறும் வியாபாரம் அல்ல.. இது பெண்களின் வலிமை! – நயன்தாரா அறிவிப்பு!