Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெட்ப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் நயன்தாராவின் ‘தி டெஸ்ட்’.. டீசர் ரிலீஸ்..!

Siva
வியாழன், 13 மார்ச் 2025 (19:02 IST)
நடிகை நயன்தாரா நடித்த "தி டெஸ்ட்" திரைப்படம் நேரடியாக நெட்ப்ளிக்ஸ் ஓடிடியில் வரும் ஏப்ரல் 4ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் டீசர் வீடியோ சில நேரத்துக்கு முன்பு இணையத்தில் வெளியானது.
 
இந்த வீடியோவில் சித்தார்த் முக்கியக் காட்சிகளில் தோன்றுகிறார். ஒரு காலத்தில் வெற்றி கிரிக்கெட் வீரராக இருந்த அவர், ஃபார்ம் சரியில்லை என்பதால் அணியில் இருந்து நீக்கப்படுகிறார்.
 
அப்போது, "நான் இந்தப் போட்டியில் கண்டிப்பாக விளையாட வேண்டும்! இந்தியாவுக்கு இன்னொரு வாய்ப்பு தேவை!" என்று சித்தார்த் கூறும்போது அதற்கு, "இந்தியா ஜெயிக்கவா? நீ ஜெயிக்கவா?" என்று பயிற்சியாளர் பதிலளிக்கிறார்.
 
"போரில் வீரர்கள் சண்டையிடுவது நாட்டை காப்பாற்றத்தானா? இல்லை, உயிர் பிழைக்கத்தானா?" என்ற கேள்விக்கு பதில் தெரியாமல் சித்தார்த் குழம்புகிறார். இதன் பின்னர், மீண்டும் கிரிக்கெட்டில் முன்னேறி, இந்தியாவை வெற்றிக்கு தர வைத்தாரா? என்பதே படத்தின் கதையென தெரிகிறது.
 
மேலும், சித்தார்த்துக்கு ஜோடியாக மீரா ஜாஸ்மின் நடித்துள்ளார் என்பதும் டீசர் மூலம் தெரிய வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் ஏப்ரல் 4ஆம் தேதி படம் வெளியாகவுள்ளதால், ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வடசென்னை 2’ படத்தில் தனுஷ், வெற்றி மாறன் தான்.. தயாரிப்பாளர் மட்டும் மாற்றம்..!

‘காற்று வெளியிடை’ படத்திற்கு பின் மீண்டும் ஒரு ரொமான்ஸ் படம்.. கார்த்தியுடன் இணையும் இயக்குனர்..!

பெண் இயக்குனர் இயக்கும் படத்தை தயாரிக்கும் சமந்தா.. விரைவில் அறிவிப்பு..!

சென்னையில் மேலும் 2 தியேட்டர்கள் இடிக்கப்படுகிறதா? சினிமா ரசிகர்கள் சோகம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments