Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மலையாள படங்களில் கமிட்டாகும் நயன்தாரா: காரணம் இதுவா?

மலையாள படங்களில் கமிட்டாகும் நயன்தாரா: காரணம் இதுவா?
, வியாழன், 19 ஏப்ரல் 2018 (15:10 IST)
தமிழில் ஆறு படங்களையும் தெலுங்கில் சில படங்களையும் கைவசம் வைத்துள்ள நடிகை நயன்தாரா அடுத்தடுத்து மலையாளத்தில் படங்கள் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். 
 
மலையாளத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக லவ் ஆக்‌ஷன் டிராமா என்ற படத்தில் நடிக்கிறார். அடுத்து கோட்டயம் குர்பானா என்ற மலையாள படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். 
 
இதற்கு என்ன காரணமாக இருக்கும் என நினைத்த போது அவரது நெருங்கிய வட்டாரத்தில் இருந்து தக்வல் கிடைத்துள்ளது. அது என்னவெனில், நயன்தாரா விரைவில் திருமண பந்தத்தில் இணைய இருக்கிறார். 
 
எனவே திருமணத்துக்கு பிறகும் கதாநாயகியாகவே நீடிக்க மலையாள படங்கள் பக்கம் கவனம் செலுத்துகிறார் என்கிறார்கள். தென்னிந்திய மொழிகளில் மலையாள பட உலகம்தான் மூத்த நடிகைகளுக்கு சொர்க்கம். 
 
ஆம், திருமணத்துக்கு பின் 40 வயதுகளில் நடிகைகள் கதாநாயகியாக நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கு அளவுக்கு மலையாளத்தில் சம்பளம் கிடைக்காது என்றாலும், கதாநாயகிகள் தனித்து திறமையை வெளிப்படுத்த முடியும். எனவேதான் இந்த முடிவை எடுத்துள்ளாராம் நயன்தாரா.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தற்கொலைக்கு முயற்சித்த ஸ்ரீ ரெட்டி