இளம் இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா நடித்து வெளியாகவுள்ள படம் கனெக்ட். முன்னதாக இவர்கள் இருவர் காம்போவில் வெளியான மாயா படம் ஹிட் என்பதால் இந்த படமும் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த படத்திற்கான பேட்டி ஒன்றில் பேசிய நயன்தாராவிடம் ஏன் நீங்கள் நடிக்கும் படத்தின் ப்ரமோஷன்களில் கலந்துகொள்வதில்லை என்க கேட்டார் தொகுப்பாளர். அதற்கு பதிலளித்த நயன்தாரா “முதலில் நான் நடித்த படங்களின் இசை வெளியீட்டு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வேன். அங்கு என்னை மதிக்கவே மாட்டார்கள். பின்னர்தான் அந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில்லை. பெரிய நடிகையான பின்னர் கலந்துகொள்ளலாம் என நினைத்தேன். ஆனால் அதுவும் நடக்க வில்லை” எனக் கூறியுள்ளார்.