Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'விஸ்வாசம்’ நினைவுகளை என்னால் மறக்கவே முடியாது: விவேக் குறித்து நயன்தாரா

Webdunia
ஞாயிறு, 18 ஏப்ரல் 2021 (18:17 IST)
'விஸ்வாசம்’ படத்தின் போது விவேக் அவர்களுடன் பழகிய நினைவுகளை என்னால் மறக்க முடியாது என லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாரா விவேக் மறைவு குறித்து தனது கருத்தை வெளியிட்டுள்ளார் 
 
நகைச்சுவை நடிகர் விவேக் நேற்று காலமான நிலையில் அவருடன் நடித்த பல நடிகர்கள் தங்களது நினைவலைகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டனர். அந்தவகையில் விவேக்குடன் பல படங்களில் நடித்துள்ள நடிகை நயன்தாராவும் தன்னுடைய இரங்கலை தெரிவித்து அவருடைய நினைவுகளை பகிர்ந்து கொண்டார் 
 
விவேக் அவர்களுடன் நான் பல படங்களில் நடித்து உள்ளேன் என்றும், குறிப்பாக 'விஸ்வாசம்’ படத்தில் அவருடன் நடித்தபோது ஏற்பட்ட நினைவலைகள் எப்போதும் எனது மனதில் ஞாபகம் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வளவு சீக்கிரம் அவர் சென்று விடுவார் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்றும் வாழ்க்கை என்பது கணிக்க முடியாத அளவிற்கு உள்ளது என்பது அவரது இழப்பு மூலம் தெரிய வருகிறது என்றும் அவரது மறைவை தாங்க கூடிய அளவுக்கு கடவுள் அவருடைய குடும்பத்திற்கு பலத்தை அளிக்கட்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நெரிசலில் காயம் அடைந்த சிறுவனுக்கு ரூ.2 கோடி.. அல்லு அர்ஜூன் தந்தை அறிவிப்பு..!

’தமிழ்ப்படம் 3’ படத்தின் அப்டேட் கொடுத்த சிவா.. எப்போது படப்பிடிப்பு?

க்ரீத்தி ஷெட்டியின் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட புகைப்படங்கள்!

96 புகழ் கௌரி கிஷனின் க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

பாடல்களுக்கு மட்டும் சுமார் 95 கோடி ரூபாய்.. கேம் சேஞ்சர் படம் பற்றி ஆச்சர்யத் தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments