Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விவேக் மனைவியின் முதல் செய்தியாளர் சந்திப்பு: என்ன கூறினார்?

Advertiesment
விவேக் மனைவியின் முதல் செய்தியாளர் சந்திப்பு: என்ன கூறினார்?
, ஞாயிறு, 18 ஏப்ரல் 2021 (14:44 IST)
விவேக் மனைவியின் முதல் செய்தியாளர் சந்திப்பு: என்ன கூறினார்?
நேற்று நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த நிலையில் இன்று அவருடைய மனைவி அருள்செல்வி செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்துள்ளார். இந்த பேட்டியின் போது அவர் கூறியதாவது:
 
என் கணவரை நான் இழந்து நிற்கும் இந்த நேரத்தில் எங்கள் குடும்பத்திற்கு பக்கபலமாகவும் மிகப்பெரிய துணையாகவும் நின்ற மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் நன்றி
 
என் கணவருக்கு அரசு மரியாதை கொடுத்த அரசுக்கு மிக்க நன்றி. அதை நாங்கள் என்றும் மறக்க மாட்டோம். நீங்கள் கொடுத்தது என் கணவருக்கு மிகப்பெரிய கெளரவம். அதேபோல் காவல்துறை சகோதரர்களுக்கு மிக்க நன்றி. கடைசி வரைக்கும் நீங்கள் எங்களுடன் இருந்தீர்கள் 
 
அதேபோல் ஊடகத்துறையில் இருக்கும் சகோதரர்களுக்கும் எனது நன்றி. நேற்று என் கணவரின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட அவருடைய கோடான கோடி ரசிகர்களுக்கு நன்றி’ என விவேக் மனைவி அருள்செல்வி கூறினார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விவேக் மரணத்திற்கு தடுப்பூசி காரணமில்லை! – சீமான் கருத்து!