Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹிப் ஹாப் தமிழா ஆதியின் 'நட்பே துணை' சிங்கிள் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 11 டிசம்பர் 2018 (12:30 IST)
தமிழ் திரையுலகில் தற்போது சிங்கிள் பாடல் ரிலீஸ் செய்வதை ஒரு டிரெண்ட்டாக படக்குழுவினர்கள் கொண்டு வந்துவிட்டனர். அந்த வகையில் இன்று ஒரு படத்தின் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளிவந்துள்ளது.

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஆகிய இரு அவதாரங்களில் ஜொலித்து வருபவர்களில் ஒருவர் ஹிப் ஹாப் தமிழா ஆதி. இவர் நடித்த 'முறுக்கு மீசை' நல்ல வெற்றியை பெற்றதை அடுத்து தற்போது 'நட்பே துணை' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

பார்த்திபன் தேசிங்கு என்பவர் இயக்கி வரும் இந்த படத்தை குஷ்பு தயாரித்து வருகிறார். இந்த படத்தின் சிங்கிள் பாடலான 'கேரளா சாங்' என்ற பாடல் வரும் 14ஆம் தேதி வெளிவரவுள்ளதாக ஹிப் ஹாப் தமிழா ஆதி தனது டுவிட்டரில் அறிவித்துள்ளார். இதுகுறித்து வெளியான போஸ்டரில் ஆதி, எமதர்மன் வேஷத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதிக்கு ஜோடியாக அனக்யா என்ற புதுமுகம் நடித்து வரும் இந்த படத்தில் இயக்குனர் கரு.பழனியப்பன் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்தியன் மைக்கேல் ஜாக்சன் பிரபுதேவாவின் முதல் லைவ் நடன நிகழ்ச்சி!

சத்தத்தை வைத்து பயமுறுத்தும் ‘சப்தம் 2’ டிரைலர்…எப்படி இருக்கு?

கெட்டவங்க மட்டும் இல்ல… யார் வேணும்னாலும் கொல பண்ணலாம்… எப்படி இருக்கிறது சுழல் 2 டிரைலர்?

ஜி வி பிரகாஷ்& சைந்தவி விவாகரத்தில் என்னை பெண்கள் டார்கெட் செய்கிறார்கள்.. திவ்யபாரதி வருத்தம்!

சேரனின் ‘ஆட்டோகிராப்’ ரீரிலீஸ்.. அசத்தலான ஏஐ வீடியோ வைரல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments