Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒத்த செருப்பு, விஸ்வாசம் படங்களுக்கும் தேசிய விருது!

Webdunia
திங்கள், 22 மார்ச் 2021 (17:45 IST)
67வது தேசிய விருதுகள் சற்றுமுன்னர் அறிவிக்கப்பட்ட நிலையில் அசுரன் திரைப்படத்திற்கு மூன்று விருதுகள் கிடைத்துள்ளன என்பதை பார்த்தோம். சிறந்த நடிகருக்கான தேசிய விருது தனுசுக்கும் சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதை வெற்றிமாறனும் சிறந்த தமிழ் படமாக அசுரன் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
மேலும் சூப்பர் டீலக்ஸ் படத்தில் சிறப்பாக நடித்த விஜய் சேதுபதிக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி விஸ்வாசம் திரைப்படத்தில் மிக சிறப்பாக இசையமைத்த இசையமைப்பாளர் டி இமான் அவர்களுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான விருது கிடைத்துள்ளது 
 
ஒத்த செருப்பு, விஸ்வாசம் படங்களுக்கும் தேசிய விருது!
அதேபோல் பார்த்திபன் நடித்து இயக்கிய ஒத்த சிறப்பு திரைப்படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சிறந்த சூரி விருது மற்றும் சிறந்த ஒலிப்பதிவு விருது இந்த படத்திற்கு கிடைத்துள்ளது. மேலும் அதேபோல் கேடி என்ற கருப்புத்துரை என்ற படத்தில் நடித்த நாகவிஷால் என்ற குழந்தை நட்சத்திரத்திற்கு சிறந்த குழந்தை நட்சத்திரம் என்ற விருது கிடைத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முதல்வர் ரேவந்த் ரெட்டியுடன் தெலுங்கு திரையுலகினர் சந்திப்பு.. அல்லு அர்ஜுன் விவகாரமா?

கண்கவர் உடையில் ஐஸ்வர்யா லஷ்மியின் வித்தியாசமன போட்டோஸ்!

ஸ்ருதிஹாசனின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோ ஆல்பம்!

ஒரு நாளில் ஒரு கோடி பேரால் பார்க்கப்பட்ட சூர்யாவின் ‘ரெட்ரோ’ பட டீசர்!

இசையமைப்பாளராக அறிமுகமான ஹாரிஸ் ஜெயராஜின் மகன் நிக்கோலஸ் ஹாரிஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments