Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஸ்தான தயாரிப்பாளரோடு மீண்டும் இணையும் நடிகர் கார்த்தி… இயக்குனர் இவர்தான்!

Webdunia
வியாழன், 8 செப்டம்பர் 2022 (14:52 IST)
சூதுகவ்வும் எனும் ட்ரண்ட் செட்டிங் படத்தை இயக்கியவர் நலன் குமாரசாமி. இந்த படத்தைப் பார்த்த கமல் நலனை அழைத்து பாராட்டியதோடு தன் படத்தை இயக்கும் வாய்ப்பையும் அளித்தார். ஆனால் சில காரணங்களால் அந்த படம் நடக்காமல் போனது. அதன் பின்னர் நலன் விஜய் சேதுபதியை வைத்து காதலும் கடந்து போகும் திரைப்படத்தை இயக்கினார். அந்த படம் திரையரங்குகளில் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும் இப்போது வரை ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.

இந்த படம் வெளியாகி 7 ஆண்டுகளாக இயக்குனர் நலன் இதுவரை எந்த படத்தையும் இயக்கவில்லை. இந்நிலையில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் படத்தை இயக்க ஒப்புக்கொண்டார்.  முதலில் ஆர்யா இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். ஆனால் இப்போது அவர் அந்த படத்தில் இருந்து விலகிவிட்டதாக சொல்லப்படுகிறது. அவருக்கு பதிலாக கார்த்தி நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தின் மூலம் ஒரு சிறு இடைவெளிக்குப் பிறகு கார்த்தி, தன்னுடைய ஆஸ்தான தயாரிப்பாளரான ஞானவேல் ராஜாவுடன் இணைய உள்ளார். ஞானவேல் ராஜா தற்போது பொருளாதார நெருக்கடியில் இருப்பதால் அவரை கைதேற்றி விட சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் அவருக்காக கால்ஷீட் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் படத்தின் புரமோ வீடியோ.. ரஜினி பட டைட்டில்..!

பட்டுப்புடவையில் ஜொலிக்கும் மாளவிகா மோகனன்.. கார்ஜியஸ் ஆல்பம்!

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் வைரல் புகைப்பட ஆல்பம்!

தோனி ஸ்டைலில் ஓய்வை அறிவித்த அஸ்வின்… ரசிகர்கள் கருத்து!

ஒரே நாள்ல 1000 ஆண்களோட பண்ணனும்.. ஆபாச நடிகையின் ஆபத்தான முயற்சி! - எச்சரிக்கும் பிரபலங்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments