விஜய் சேதுபதி & மிஷ்கின் கூட்டணியின் நீண்ட நாள் தாமத ‘ட்ரெய்ன்’ ரிலீஸ் அப்டேட்!

vinoth
செவ்வாய், 4 நவம்பர் 2025 (09:50 IST)
பிசாசு 2 படத்தில் இணைந்து பணியாற்றிய மிஷ்கின் மற்றும் விஜய் சேதுபதி இப்போது ஒரு முழுநீளப் படத்தில் இணைந்து பணியாற்ற உள்ளனர். இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் நடந்து முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன. இந்த படத்துக்கு இயக்குனர் மிஷ்கினே இசையமைக்கிறார். பௌசியா ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். படத்தில் நாசர் வில்லனாக நடிக்கிறார்.

மேட்டுப் பாளையத்தில் இருந்து சென்னை வரும் டிரெயினில் நடக்கும் சம்பவங்களே திரைக்கதையாக அமைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஒரு சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகும் இந்த படத்தில் விஜய் சேதுபதி ஒரு டிடெக்டிவ்வாக நடிப்பதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் பணிகள் நிறைவடைந்தும் இன்னும் ஓடிடி மற்றும் டிஜிட்டல் வியாபாரம் நடக்காததால் படத்தின் ரிலீஸ் தாமதமாகிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் அந்த படத்தை எப்படியாவது நவம்பர் மாதத்தில் ரிலீஸ் செய்துவிட தயாரிப்பாளர் தாணு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் டிஜிட்டல் வியாபாரம் நடக்கவில்லை என்றாலும் பரவாயில்லை முதலில் ரிலீஸ் செய்துவிட்டு பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்ற முடிவில் அவர் இருப்பதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஏ நெஞ்சு குழி தொட்டு போகிற அடி அலையே அலையே..." 'பராசக்தி' பாடல் ப்ரோமோ வீடியோ.!

திவ்யபாரதியின் லேட்டஸ்ட் கிளாமரஸ் க்ளிக்ஸ்!

கருநீல உடையில் கவர்ந்திழுக்கும் சமந்தாவின் அழகிய க்ளிக்ஸ்!

கைதி படத்தின் மலேசிய ரீமேக் ‘பந்துவான்’… ப்ரமோட் செய்ய மலேசியா சென்ற கார்த்தி!

வாரிசு நடிகர்கள் ரசிகர்களுக்குப் பதில் சொல்லவேண்டிய கட்டாயம் உள்ளது… துருவ் விக்ரம் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments