Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மைனா நந்தினியின் ரீசன்ட் போட்டோவிற்கு குவியும் வாழ்த்துக்கள்!

மைனா நந்தினியின் ரீசன்ட் போட்டோவிற்கு குவியும் வாழ்த்துக்கள்!
, புதன், 2 செப்டம்பர் 2020 (08:13 IST)
தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் குடும்ப பாங்கான கிராமத்து பெண் வேடங்களில் நடித்து ரசிகர்களின் இதயங்களை கொள்ளையடித்தவர் நடிகை மைனா நந்தினி. வம்சம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் ரசிகர்களின் பரீட்சியமான நடிகையாக வலம் வர தொடங்கினார்.

இதனால் அவருக்கு சீரியல்களில் நடிக்கும் வாய்ப்புகள் அடிதடுத்து கிடைத்தது. அந்தவகையில் இவருக்கு பேரும், புகழும் கொடுத்தது சரவணன் மீனாட்சி தொடர் தான். இதையடுத்து பிரியமானவள், கல்யாணம் முதல் காதல் வரை, சின்னத்தம்பி, அரண்மனைக்கிளி, டார்லிங் டார்லிங் ஆகிய தொடர்களில் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி உள்ளார்.

கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜா ராணி ஆகிய படங்களிலும் நடித்து புகழ்பெற்றுள்ளார். இவரது முதல் திருமணத்தில் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து கணவனை இழந்த மைனா பின்னர் சீரியல் நடிகர் யோகேஷ் என்பவரை காதலித்து மறுமணம் செய்துக்கொண்டார். அழகான மறுவாழ்வை தனது கணவருடன் துவங்கியிருக்கும் மைனா நந்தினி தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார்.

அண்மையில் அவருக்கு வீட்லேயே வளைகாப்பு நடத்தினர். அந்த போட்டோக்கள்  சமூகவலைத்ததில் வைரலாகியது. இந்நிலையில் தற்ப்போது மைனா தனது காதல் கணவருடன் சேர்ந்து pregnancy photo shoot  நடத்தியுள்ளார். யோகேஷ் இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள இந்த அழகிய போட்டோவிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

#hi_friends_


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கட்சியும் வேண்டாம், திரைப்படமும் வேண்டாம், பிக்பாஸ் ஒன்றே போதும்: கமல் முடிவு?