Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உலகிலேயே எனக்கு மிகவும் பிடித்த வீரர் ரோஹித் சர்மா- பிரபல நடிகர்

Advertiesment
Vikrant Massey-rohit

Sinoj

, செவ்வாய், 20 பிப்ரவரி 2024 (12:50 IST)
''உலகிலேயே எனக்கு மிகவும் பிடித்த வீரர் ரோஹித் சர்மாதான்'' என்று 12th ஃபெயில் என்ற படத்தில் நடித்த நடிகர் விக்ராந்த் மாஸே தெரிவித்துள்ளார்.

இயக்குனர் விது வினோத் சோப்ரா இயக்கத்தில்,விக்ராந்த் மாஸி, மேதா ஷங்கர், ஆனந்த் வி ஜோஷி, அனுஷ்மான் புஷ்கர் உள்ளிட்டோர் நடிப்பில், வினோத் சோப்ரா பிலிம்ஸ் சார்பில் வெளியான படம் 12th ஃபெயில்.
 
இப்படத்தை ஜீ ஸ்டுடியோ வெளியிட்டிருந்த நிலையில், கடந்த  அக்டோபர் 27 அம தேதி இப்படம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.
 
பாக்ஸ் ஆபிஸும் வசூல் குவித்தது. இந்த நிலையில், இப்படத்தின் நடிகர் விக்ராந்த் மாஸே இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மாவை புகழ்ந்துள்ளார்.
 
இதுகுறித்து அவர்    கூறியதாவது:
 
''உலகிலேயே எனக்கு மிகவும் பிடித்த வீரர் ரோஹித் சர்மாதான்'' என்று தெரிவித்துள்ளார்.
 
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மற்றும் நட்சத்திர வீரராக ரோஹித் சர்மா உள்ளார். அவருக்கு உலக்க முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். அணியைத் திறம்பட வழி நடத்திச் செல்வதில் அவர் அனைவருக்கும் பிடித்தமானராக உள்ளதாக பலரும் கருத்துகள்  கூறிவருகின்றனர்.
 
சமீபத்தில் ரோஜித் சர்மா, 12th ஃபெயில் என்ற திரைப்படத்தைப் பார்த்து, ஊக்கமளிக்கும் படம் எனப் பாராட்டியிருந்தது  குறிப்பிடத்தக்கது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

People’s Choice 2024 விருதை தட்டி சென்ற 2கே கிட்ஸின் ஃபேவரைட் நாயக, நாயகிகள்!