Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இசையமைப்பாளர் டி.இமான் இசையில் இணையத்தைக் கலக்கும் “மயோன்” பாடல்

இசையமைப்பாளர் டி.இமான் இசையில்  இணையத்தைக் கலக்கும் “மயோன்” பாடல்

J.Durai

, சனி, 6 ஏப்ரல் 2024 (11:37 IST)
இசையமைப்பாளர் டி.இமான் இசையில் உருவான புதிய பாடலான “மயோன்” பாடல், இசை ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பில் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. 
 
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் டி.இமான். கிராமத்து இசை, மெலடி, குத்துப்பாட்டு என அனைத்து வகைகளிலும் கலக்கக்கூடியவர். அவரது இசையில் மைனா, கும்கி, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், சீமராஜா, ரோமியோ ஜூலியட், அண்ணாத்த, விஸ்வசம் எனப்  பல படங்கள் முழு  ஆல்பம் ஹிட்களாக, இசை ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. 
 
தமிழ் இசை உலகில், ரசிகர்களின் பாடல் பிளே லிஸ்டில் நீங்காத இடம் பிடித்துள்ளது டி.இமான் பாடல்கள். அந்த வரிசையில் தற்போது, கோபுரம் பிலிம்ஸ் G.N.அன்புச்செழியன் அவர்கள் தயாரிப்பில், நட்சத்திர நடிகர் சந்தானம் நடிப்பில்  உருவாகியிருக்கும் ‘இங்க நான்தான் கிங்கு‘ என்ற படத்தின் ‘மாயோனே செல்ல மாயோனே‘ என்ற பாடல், சார்ட்பஸ்டர் ஹிட்டாக மாறியுள்ளது.
 
இணையம் முழுக்க  REELS-களாக  இப்பாடல் மிகப்பெரிய வைரலாகி வருகிறது. நீண்ட நாட்களுக்குப் பின் அனைத்து தரப்பு பெண்களையும்  மிகவும்  கவர்ந்துள்ளது இப்பாடல். 
 
மாயோனே பாடல் நகரம் முதல் கிராமம் வரை அனைத்து இடங்களிலும் அனைவரும் முணுமுணுக்கும் பாடலாக மாறியுள்ளது. 
 
பட வெளியீட்டுக்கு முன்னதாக பாடலுக்குக் கிடைத்து வரும் மிகப்பெரிய வரவேற்பால், இசையமைப்பாளர் டி.இமான் அவர்களும்  தயாரிப்பாளர் திரு G.N. அன்புச்செழியன் அவர்களும் மற்றும்  படத்தின் நாயகன் சந்தானம் அவர்களும் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
 
இப்படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்த நிலையில் இப்படத்தின் திரையரங்கு வெளியீட்டுப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

'இன்று நேற்று நாளை' மற்றும் 'அயலான்' இயக்குநர் ரவிக்குமார் எழுத்தில் உருவாகும் புத்தம் புதிய, சுவாரசிய காலப்பயணக் கதை!