Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிரேட்மார்க் சல்மான் கான் மாஸ் மசாலவாக ‘சிக்கந்தர்’ டீசர்!

Webdunia
வெள்ளி, 28 பிப்ரவரி 2025 (10:25 IST)
தர்பார் தோல்விக்குப் பிறகு மூன்று ஆண்டுகள் எந்த படமும் இயக்காமல் இருந்த ஏ ஆர் முருகதாஸ், இப்போது சிவகார்த்திகேயனை வைத்து தனது அடுத்த படத்தைத் தொடங்கியுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த மாதம் சென்னையில் தொடங்கியது. படத்தில் கதாநாயகியாக ருக்மினி வசந்த் நடிக்க அனிருத் இசையமைக்கிறார்.

இந்த படத்துக்கு இடையிலேயே முருகதாஸ் அடுத்து பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான சல்மான் கானோடு இணைந்து சிக்கந்தர் என்ற படத்தை உருவாக்க உள்ளார். இந்த படத்தின் பட்ஜெட் 400 கோடி ரூபாய்க்கு மேல் என சொல்லப்படுகிறது. இந்த படம் அடுத்த ஆண்டு ரம்ஜானுக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் விரைவில் படப்பிடிப்பை தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இந்த படத்தில் வில்லனாக நடிக்க சத்யராஜும், கதாநாயகியாக நடிக்க ராஷ்மிகா மந்தனாவும் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது. சந்தோஷ் நாராயணன் பின்னணி இசை அமைத்துள்ளார்.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. வழக்கமான சல்மான் கான் படங்களில் இருக்கும் மாஸ் பில்டப் ஆக்‌ஷன் காட்சிகள், கொஞ்சம் ரொமான்ஸ் என கலந்துகட்டிக் கொடுத்துள்ளார் ஏ ஆர் முருகதாஸ். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தமிழ் சினிமாவில் படம் எடுத்து ரிலீஸ் செய்வது கடினமாக உள்ளது.. இயக்குனர் பா ரஞ்சித் வருத்தம்!

டிரேட்மார்க் சல்மான் கான் மாஸ் மசாலவாக ‘சிக்கந்தர்’ டீசர்!

நயன்தாராவுக்கு வில்லன் ஆகும் அருண் விஜய்.. எந்த படத்தில் தெரியுமா?

தனுஷின் ‘குபேரா’ படத்தின் ரிலீஸ் எப்போது?.. வெளியான தகவல்!

ஜெயிலர் 2 படத்தில் சிவராஜ் குமார் நடிக்கிறாரா?... இல்லையா?

அடுத்த கட்டுரையில்
Show comments