Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முந்தானை முடிச்சு படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் தவக்களை மாரடைப்பால் மரணம்!

முந்தானை முடிச்சு படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் தவக்களை மாரடைப்பால் மரணம்!
, ஞாயிறு, 26 பிப்ரவரி 2017 (14:57 IST)
முந்தானை முடிச்சு படம் மூலம் காமெடி நடிகரான அறிமுகமாக நடிகர் தவக்களை சென்னையில் மாரடைப்பால் காலமானார்.  அவருக்கு வயது 42.



1983ம் ஆண்டு பாக்யராஜ், ஊர்வசி நடிப்பில் வெளியான முந்தானை முடிச்சு படம் மூலம் நடிகர் ஆனவர்  தவக்களை. ஆள் குள்ளமாக இருந்தாலும் நடிப்பில் அசத்தி ரசிகர்களின் மனதில் உயர்ந்தவர்.
 
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தவக்களையின் இயற்பெயர் சிட்டிபாபு. முந்தானை முடிச்சு படத்தில் இவரது கதாபாத்திரத்தின்  பெயர்தான் ‘தவக்களை’. பின்னாளில் அதுவே அவரின் பெயராக நிலைத்துவிட்டது. இவர் தமிழ், தெலுங்கு, மலையாள  மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
 
அவர் சென்னை வடபழனியில் வசித்து வந்தார். இந்நிலையில் இன்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு வீட்டிலேயே உயிர்  பிரிந்தது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹைட்ரோ கார்பன் திட்டம்: நடிகர் கமல் சரமாரி ட்விட்!!