Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’’மாஸ்டருக்கு அதிக தியேட்டர்....’’ஈஸ்வரன்’’ பட பேச்சுவார்த்தையில் தோல்வி ! படக்குழு அதிர்ச்சி

Webdunia
செவ்வாய், 22 டிசம்பர் 2020 (15:39 IST)
ஈஸ்வரன் படக்குழுவினருடன் திரையரங்கு உரிமையாளர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய். இவரது நடிப்பில், உருவாகியுள்ள படம் மாஸ்டர். இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தைப் பொங்கலுக்கு ரிலீஸ் செய்யவுள்ளதாகத் தகவல்கள் வெளியானது.

அதேபோல் சிலம்பரசன் நடிப்பில் சுசீந்தரன் இயக்கியுள்ள ஈஸ்வரன் படமும் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்படது.

இந்நிலையில்,  பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்படுத்தியுள்ள விஜய்யின் மாஸ்டர் படத்தை தமிழகம் முழுவதும் 1000 ஆயிரத்திற்கும் அதிகான தியேட்டர்களின் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிற்து.

அதனால் சிம்புவின் படத்திற்கு 100 தியேட்டர்கள் மட்டுமே கிடைத்துள்ளதால் ஈஸ்வரன் படம் வெளியிடத் தாமதம் ஆகலாம் என தெரிகிறது. அதேசமயம் சிம்புவின் பிறந்தநாள் ஜனவரி இறுதியில் வருவதால் அப்போது படத்தை வெளியிடுவார்கள் என தெரிகிறது.

இந்நிலையில், மாஸ்டர் திரைப்படம் சுமார் 800 தியேட்டர்களிலும் ஈஸ்வரன் 200 தியேட்டர்களிலும் திரையிடப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஒருவேளை ஈஸ்வரன் படத்திற்கு நல்லவரவேற்பு கிடைத்தால், ஒருவாரத்தில்  அதிகதிரையரங்கில் வெளியிடுவது குறித்து யோசிக்கலாம் என தியேட்டர் உரிமையாளர்கள் கூறியதால் படக்குழு அதிர்ச்சியடைந்ததாகவும், மேலும் பேச்சுவார்த்தை தொடரும் எனத் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அடுத்த கட்டுரையில்
Show comments