Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜனவரி 14ல் ‘ஈஸ்வரன்’ ரிலீஸ்: வதந்திகள் பொய்யானது!

ஜனவரி 14ல் ‘ஈஸ்வரன்’ ரிலீஸ்: வதந்திகள் பொய்யானது!
, வெள்ளி, 18 டிசம்பர் 2020 (19:55 IST)
ஜனவரி 14ல் ‘ஈஸ்வரன்’ ரிலீஸ்: வதந்திகள் பொய்யானது!
சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள ‘ஈஸ்வரன்’ திரைப்படம் ஏற்கனவே வரும் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த தகவல் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது
 
சற்றுமுன் வெளியான தகவலின்படி ‘ஈஸ்வரன்’ திரைப் படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை முன்னணி வினியோகஸ்தரான 7ஜி சிவா அவர்கள் கைப்பற்றி உள்ளதாகவும் அவரது தரப்பினர் கூறும் தகவலின்படி ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல் விருந்தாக ‘ஈஸ்வரன்’ திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன 
 
இதனை அடுத்து ‘ஈஸ்வரன்’ திரைப்படம் சிம்பு ரசிகர்களுக்கு பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ’மாஸ்டர்’ திரைப்படம் பொங்கல் விருந்தாக ஜனவரி 13-ஆம் தேதி வெளியாகும் என்று செய்திகள் வெளிவந்திருக்கும் நிலையில் மறுநாள் ‘ஈஸ்வரன்’ திரைப்படம் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
’மாஸ்டர்’ திரைப்படம் தமிழகத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் வெளியாக இருப்பதாகவும் அதனால் வேறு திரைப்படங்கள் வெளியாகாது என்றும் யூடியூ சேனல் நடத்தி வரும் சில அதிமேதாவிகள் வதந்திகளை பரப்பி வந்தனர். அந்த வதந்திகளை பொய்யாக்கும் வகையில் ‘ஈஸ்வரன்’ திரைப்படம் ஜனவரி 14-ஆம் தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய்யின் ’’மாஸ்டர் ’’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு?? ரசிகர்கள் கொண்டாட்டம் !