Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூக்குத்தி அம்மன் 2 படத்துக்கு நயன்தாராவுக்கு சம்பளம் கிடையாதா?... பின்னணி என்ன?

vinoth
புதன், 25 செப்டம்பர் 2024 (09:20 IST)
கடந்த 2020 ஆம் ஆண்டு ரிலிஸான மூக்குத்தி அம்மன் படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தில் நயன்தாரா மூக்குத்தி அம்மனாகவும், ஆர் ஜே பாலாஜி மற்றும் ஊர்வசி உள்ளிட்டோர் மற்ற கதாபாத்திரங்களிலும் நடித்திருந்தனர். ஆர் ஜே பாலாஜியுடன் இணைந்து என் ஜி சரவணன் இயக்கியிருந்தார்.

இந்நிலையில் ஆர் ஜே பாலாஜி மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கு மாசானி அம்மன் என பெயர் வைத்து வேலையை ஆரம்பித்துள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் முதல் பாகத்தை தயாரித்த வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தைத் தயாரிக்கவில்லை என சொல்லப்பட்டது.

இதற்கிடையில் பாலாஜிக்கு போட்டியாக வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் 2 வை எடுக்க உள்ளதாக திடீர் அறிவிப்பை சில வாரங்களுக்கு முன்னர் வெளியிட்டது. பின்னர் அந்த படத்தின் இயக்குனராக சுந்தர் சி அறிவிக்கப்பட்டுள்ளார். சுந்தர் சி இயக்குனர் பொறுப்பை ஏற்றுள்ளதால் படத்தின் கமர்ஷியல் மதிப்பு உயர்ந்துள்ளது. சுந்தர் சி இயக்குனராக மட்டும் இல்லாமல் முதல் பிரதி அடிப்படையில் இந்த படத்தைத் தயாரிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்தில் நடிக்கும் நயன்தாராவும் ஒரு தயாரிப்பாளராக இணைந்துள்ளார். படத்துக்காக அவர் சம்பளம் எதுவும் வாங்காமல் லாபத்தில் பங்கு பெற உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மீண்டும் சூர்யாவுடன் இணைய வாய்ப்பிருக்கிறதா?... இயக்குனர் பாலா அளித்த பதில்!

விக்ரம் பற்றிய கேள்வி… நேர்காணலில் இயக்குனர் பாலாவின் ரியாக்‌ஷன் இதுதான்!

கையில் பாம்பை சுற்றிக்கொண்டு கார் ரைட்… அடுத்த சர்ச்சையில் சிக்கிய டிடிஎஃப் வாசன்!

முஃபாசா படம் தமிழ்நாட்டில் மட்டும் இவ்வளவு கோடி ரூபாய் வசூலா?

வணங்கான் படத்தில் இருந்து சூர்யா விலகவில்லை… நடந்தது இதுதான் –மனம் திறந்த இயக்குனர் பாலா!

அடுத்த கட்டுரையில்
Show comments