Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டில் மட்டும் 350 திரைகள்… மாஸ் காட்டிய மோகன்லாலின் எம்புரான்!

vinoth
வியாழன், 27 மார்ச் 2025 (09:55 IST)
மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவர் பிருத்விராஜ். இவர் தனது முதல்படமாக மோகன்லாலை வைத்து லூசிபர் படத்தை இயக்கி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தார். ஆனால் அதன் பின்னர் நடிப்பில் மீண்டும் கவனம் செலுத்த தொடங்கினார். இதற்கிடையில் லூசிஃபர் படத்தின் இரண்டாம் பாகத்தை பிருத்விராஜ் இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது.

ஆனால் கோவிட் உள்ளிட்ட காரணங்களால் எம்பூரான் திரைப்படத்தின் ஷூட்டிங் நீண்ட நாள் தாமதத்துக்குப் பிறகு கடந்த ஆண்டு இறுதியில் நிறைவடைந்தது.  அடுத்தடுத்து படத்தின் முதல் லுக் போஸ்டர், டீசர் மற்றும் டிரைலர் ஆகியவை ரிலீஸாகிக் கவனம் ஈர்த்த நிலையில் இன்று படம் உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீசாகிறது.

இந்நிலையில் எம்புரான் திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 350 திரைகளில் ரிலீஸாகிறது. இதுவரை தமிழ்நாட்டில் எந்தவொரு மலையாளப் படமும் இத்தனை அதிக எண்ணிக்கையில் ரிலீஸானதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தமிழ்நாட்டில் மட்டும் 350 திரைகள்… மாஸ் காட்டிய மோகன்லாலின் எம்புரான்!

LIK படத்தின் ஒரு பாடலுக்கு 5 கோடி ரூபாயா?... தயாரிப்பாளருக்கு அதிர்ச்சி கொடுத்த விக்னேஷ் சிவன்!

ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் இவர்தான் கதாநாயகியா?.. வெளியான தகவல்!

சூர்யாவின் ரெட்ரோ படத்துடன் மோதும் சசிகுமாரின் ‘டூரிஸ்ட் பேமிலி’!

திரையரங்கில் ஜொலிக்காத ஜீவாவின் ‘அகத்தியா’… ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments