Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எம்புரான் படத்துக்குத் தடைகோரிய பிரமுகரை சஸ்பெண்ட் செய்த கேரள பாஜக!

vinoth
புதன், 2 ஏப்ரல் 2025 (09:22 IST)
மோகன்லால் நடித்த ’எம்புரான்’ திரைப்படம் ரம்ஜானை முன்னிட்டு வெளியாகி எதிர்மறை விமர்சனங்களையும் கடந்து வெற்றிகரமாக ஓடி வருகிறது. இதுவரை 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என கேரள மாநில பாஜக நிர்வாகி விஜேஷ் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

கேரள உயர்நீதிமன்றம் விடுமுறையில் இருந்ததால் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ‘இந்த படத்தால் ஏற்பட்ட வன்முறை, காவல்துறையின் எஃப் ஐ ஆர் எதுவும் இருக்கிறதா? இது தணிக்கையால் சான்றளிக்கப்பட்ட படம்தானே?” எனப் பலக் கேள்விகளை அவரை நோக்கி எழுப்பி  இது சம்மந்தமாக எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனக் கூறியது.

மேலும் வழக்கு கேரள உயர்நீதிமன்றத்தின் விடுமுறை முடிந்ததும் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனக் கூறியது. இந்நிலையில் இந்த வழக்குத் தொடர்ந்த விஜேஷை கேரள பாஜக சஸ்பெண்ட் செய்துள்ளது. கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதற்காக அவர் மேல் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என்ன செய்யப் போகிறாய் என்று கமல் சார் கேட்பார்?... தக் லைஃப் இசையமைப்பு அனுபவம் பகிர்ந்த ARR!

சூர்யாவின் ரெட்ரோ பட டிரைலரை உருவாக்கியது இந்த இயக்குனர்தானா?... வெளியான தகவல்!

விக்ரம்மின் ‘வீர தீர சூரன்’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சூரியின் அடுத்த படத்துக்கு வித்தியாசமான தலைப்பு… கவனம் ஈர்க்கும் முதல் லுக் போஸ்டர்!

நாயகன் படத்துக்குப் பிறகு மணிரத்னத்துடன் இணையாதது தவறு- மனம் திறந்து பேசிய கமல்ஹாசன்!

அடுத்த கட்டுரையில்
Show comments