Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இன்று ஒரே நாளில் தொடங்கும் மோகன்லால் - மம்முட்டியின் புதிய படங்கள்!

இன்று ஒரே நாளில் தொடங்கும் மோகன்லால் - மம்முட்டியின் புதிய படங்கள்!
, செவ்வாய், 17 ஆகஸ்ட் 2021 (09:45 IST)
இன்று ஒரே நாளில் தொடங்கும் மோகன்லால் - மம்முட்டியின் புதிய படங்கள்!
இன்று ஒரே நாளில் கேரளா சூப்பர் ஸ்டார்களான மோகன்லால் மற்றும் மம்முட்டி ஆகிய இருவரின் புதிய படங்கள் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
மோகன்லால் நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவாக இருக்கும் 12th man என்ற திரைப்படம் விரைவில் தொடங்க உள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது,. த்ரிஷ்யம் மற்றும் த்ரிஷ்யம் 2 ஆகிய வெற்றி படங்களை அடுத்து மீண்டும் இந்த கூட்டணி இணைவதால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது 
 
அதேபோல் மம்முட்டி மற்றும் பார்வதி இணைந்து நடிக்கும் பழு என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் மோகன்லாலின் 12th man மற்றும் மம்முட்டியின் பழு ஆகிய இரண்டு திரைப்படங்களின் படப்பிடிப்புகள் இன்று தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு விளம்பரங்கள் ஊடகங்களில் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
கேரளா சூப்பர் ஸ்டார்களான மம்முட்டி மற்றும் மோகன்லால் ஆகிய இருவரது புதிய திரைப்படங்கள் இன்று ஒரே நாளில் தொடங்கி இருப்பது அம்மாநில திரை உலக ரசிகர்களை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

90s கலக்கிய விஜே ஆனந்த கண்ணன் மறைவு!!