Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லிஜோ ஜோஸ் இயக்கத்தில் மோகன் லால் நடிக்கும் மலைக்கோட்டை வாலிபன்… முதல் லுக் போஸ்டர் அப்டேட்!

Webdunia
திங்கள், 10 ஏப்ரல் 2023 (07:55 IST)
மலையாள சினிமாவில் தற்போது இருக்கும் முக்கியமான இயக்குனர்களில் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரியும் ஒருவர். அவர் இயக்கிய அங்கமாலி டைரிஸ், ஈ மா வு மற்றும் ஜல்லிக்கட்டு ஆகிய படங்கள் மிகப்பெரிய அளவில் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றவை. ஜல்லிக்கட்டு இந்தியாவின் சார்பாக ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டது. இந்த படத்தில் கமல்ஹாசன் மற்றும் கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி ஆகியோரை கௌரவ வேடத்தில் நடிக்க வைக்க விரும்பி, அவர்களிடம் மோகன்லால் பேச்சுவார்த்தை நடத்தியதாக சொல்ல்லப்பட்டது. ஆனால் கமல்ஹாசன் இந்தியன் 2 பட வேலைகளைக் காரணம் காட்டி அந்த அழைப்பை ஏற்க மறுத்துவிட்டார் என்றும், ரிஷப் ஷெட்டியும், தனது அடுத்த பட வேலைகளைக் காரணம் காட்டி மறுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படம் சுதந்திரத்துக்கு முன்பு இந்தியாவில் பிரபலமாக இருந்த மல்யுத்த வீரரான காமா என்கிற குலாம் முகமது பக்ஷ் என்பவரின் கதாபாத்திரத்தில் மோகன்லால் நடிப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதை படத்தின் தயாரிப்பு தரப்பு மறுத்துள்ளது.

இந்நிலையில் ஏப்ரல் 14 ஆம் தேதியில் இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் ரிலீஸ் ஆக உள்ளது. மேலும் படம் இம்மாத இறுதியில் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

சென்னையில் செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில் கலந்துகொண்ட, நடிகர் கார்த்தி!!

ரஷ்ய சினிமாவின் பாரம்பரியம் மிக்க MOSFILM ஸ்டுடியோவின் 100-வது ஆண்டு விழாவை வெற்றிகரமாக கொண்டாடியது!.

சசிகுமார் - சிம்ரன் முதன்முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடக்கம்!

மாடர்ன் ட்ர்ஸ்ஸில் துஷாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments