Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாட்டு நாட்டு பாடல் என்னுடைய சிறந்த இசையில்லை… MM கீரவாணி தடாலடி!

vinoth
வியாழன், 11 ஜூலை 2024 (11:36 IST)
பாகுபலி புகழ் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளியாகி சூப்பர்ஹிட்டான ஆர்.ஆர்.ஆர். படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம் பெற்ற முதல் இந்திய திரைப்பட பாடலாகும்.  இந்நிலையில் இன்று நடந்த ஆஸ்கர் விருதுகளில் சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் நாட்டு நாட்டு பாடல் விருதை வென்றுள்ளது.

இந்த விருதை கீரவாணி பெற்றதின் மூலம்  14 ஆண்டுகளுக்குப் பிறகு ஏ ஆர் ரஹ்மானுக்குப் பிறகு இந்திய இசையமைப்பாளர் ஒருவர் ஆஸ்கர் மேடையில் விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய கீரவாணி ‘நாட்டு நாட்டு’ பாடல் என்னுடைய சிறந்த இசையில்லை எனக் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் “பாகுபலி இரண்டு பாகங்களுக்கும் சேர்த்து நான் அமைத்த இசையை விட ‘நாட்டு நாட்டு’ பாடல் சிறந்த இசையில்லை. தாமதமாகவோ முன்பாகவோ ஒரு பாடலுக்கான அங்கிகாரம் கிடைத்துள்ளது. உங்களுக்கான அங்கீகாரம் ஏதோ ஒரு வகையில் வந்து சேரும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஏ ஆர் ரஹ்மான் ஆஸ்கர் வாங்கும்போதும் இதுபோன்ற கருத்துகளே எழுந்தன. ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்த ரோஜா, பம்பாய் ஆகிய படங்களை ஒப்பிடும்போது ஜெய்ஹோ பாடல் சிறப்பான பாடல் இல்லை என சொல்லப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹேமா கமிஷனில் வாக்குமூலம் அளித்த 20 சாட்சிகள்.. சிக்கலில் திரையுலக பிரபலங்கள்..!

தனுஷின் 52வது படத்தின் டைட்டில் இதுதான்.. இசையமைப்பாளர் யார்?

நடிகைகள் குறித்து அவதூறுப் பேச்சு: மன்னிப்பு கோரினார் டாக்டர் காந்தராஜ்

அனிகா சுரேந்திரனின் லேட்டஸ்ட் வைரல் போட்டோஷூட் ஆல்பம்!

கிளாமர் உடையில் துஷாராவின் ஸ்டைலிஷான போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments